Neem Tree Multi Purpose
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! தினமும் இந்த பதிவின் வாயிலாக பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு பயனுள்ள தகவலை தெரிந்து கொண்டோம் என்ற மனதிருப்தி இருக்கும். அப்படி என்ன தகவலாக இருக்கும் என்று யோசிப்பீர்கள்.
நாம் பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் ஏதாவது ஒரு விஷயத்திற்கு கட்டாயம் பயன்படும். ஆனால் ஒரு சில பொருட்கள் மட்டும் தான் நிறைய விஷயத்திற்கு பயன்படுகிறது. அதை தான் நாம் Multi Purpose என்று கூறுகின்றோம். அப்படி பல பொருட்கள் இருக்கின்றன. அப்படி இருக்கும் பொருட்களில் ஒன்றை பற்றி தான் இந்த பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்..!
உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா..? அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே..! |
Neem Tree Multi Purpose in Tamil:
வேப்பமரத்தை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். வேப்பமரம் அன்றும் சரி இன்றும் சரி பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது இந்திய துணைக்கண்டத்தை தாயகமாகக் கொண்ட மரமாகும்.
வேப்ப மரங்கள் 15-30 மீட்டர் (49-98 அடி) உயரம் வரை வளரக்கூடியது. இந்த மரத்தில் உள்ள இலைகளில் தொடங்கி வேர், பட்டை, காய் மற்றும் பூக்கள் என்று அனைத்து பாகங்களும் பல நன்மைகளை தருகிறது. இதை தான் நாம் Multi Purpose என்று சொல்கிறோம்.
வேப்ப மரத்தின் இலைகள்:
இன்றைய நிலையில் கிராம புறங்களில் மட்டுமே வேப்பமரம் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் வேப்பமரத்தில் எவ்வளவு நன்மைகள் நிறைந்து இருக்கிறது தெரியுமா..?
வேப்பமரத்தின் இலைகள் தொழுநோய்கள், கண் கோளாறுகள், இரத்தம் தோய்ந்த மூக்கு, குடல் புழுக்களை அழிக்க, வயிற்று வலி, பசியின்மை, தோல் புண்கள் குணமாக, இதயம் மற்றும் இரத்த நாளங்களின் நோய்களை அதாவது இருதய நோய்களை குணப்படுத்த, காய்ச்சல், நீரிழிவு, ஈறு அழற்சி மற்றும் கல்லீரல் பாதிப்பு போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது .இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 பனைமரம் பற்றி சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா
மரத்தின் வேர்:
வேப்பமரத்தின் வேர் ஒரு துவர்ப்பு மருந்தாக பயன்படுத்தப்படுகின்றன. சிலர் தலையில் பேன், தோல் நோய்கள், காயங்கள் மற்றும் தோல் புண்களுக்கு சிகிச்சையளிக்க வேப்ப மரத்தின் வேர் பயன்படுத்தப்படுகிறது.
வேப்ப மரத்தின் பட்டை:
வேப்ப மரத்தின் பட்டை குளிர்ச்சியானது. இதில் கசப்பு தன்மை, துவர்ப்பு, காரத்தன்மை மற்றும் குளிர்பதமானதாக இருக்கிறது. இந்த பட்டை சோர்வு, இருமல், காய்ச்சல், பசியின்மை, புழு தொல்லை ஆகியவற்றிற்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது காயங்கள் மற்றும் வாந்தி, தோல் நோய்கள், அதிக தாகம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.
வேப்பங்காய் மற்றும் பழம்:
வேப்பமரத்தில் இருக்கும் காய் மற்றும் பழம் மூல நோய், குடல் புழுக்களை அழிக்க, சிறுநீர் பாதை கோளாறுகள் நீங்க, சளி, கண் கோளாறுகள், சர்க்கரை நோய், காயங்கள், தொழுநோய் ஆகியவற்றிற்கு மருந்தாக பயன்படுத்தபடுகிறது.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 உங்களுடைய வீட்டில் வாழைமரம் இருக்கா அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க
மரக்கிளைகள்:
இந்த மரத்தின் கிளைகள் இருமல், ஆஸ்துமா, மூல நோய், குடல் புழுக்கள், குறைந்த விந்தணுக்களின் அளவு, சிறுநீர் கோளாறுகள், நீரிழிவு நோய் போன்ற பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தபடுகிறது.
வேப்ப மரத்தின் பூக்கள்:
வேப்பமரத்தின் பூக்களில் இருக்கும் பண்புகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், செரிமானப் பாதையில் உள்ள புண்களைக் குணப்படுத்தவும், கர்ப்பத்தைத் தடுக்கவும், பாக்டீரியாவைக் கொல்லவும், வாயில் பிளேக் உருவாவதைத் தடுக்கவும், வீக்கம், தொற்றுகள், காய்ச்சல், தோல் நோய்கள் மற்றும் பல் கோளாறுகள் போன்ற நோய்களை குணப்படுத்த பயன்படுகிறது.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |