Omavalli Plant Multi Purpose in Tamil
அனைவருடைய வீட்டிலும் வீட்டை சுற்றி நிறைய செடிகள் மற்றும் கொடிகள் இருக்கும். நாம் அதனை அழகிற்காகவும் ஆரோக்யத்திற்காகவும் வளர்த்து வருவோம். அத்தகைய செடிகளில் ஓமவல்லி செடியும் ஒன்று. இந்த ஓமவல்லி செடியில் கிடைக்கக்கூடிய இலையினை சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக அனைவரும் பயன்படுத்துவோம். ஆனால் அந்த இரண்டினை தாண்டியும் இதில் எண்ணற்ற பலன்கள் உள்ளது. ஆகையால் ஓமவல்லி செடி முதல் அதில் உள்ள இலை வரை எவற்றிற்கு எல்லாம் பயன்படுகிறது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ துளசி செடி வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா.
ஓமவல்லி செடி:
ஓமவல்லி செடியானது லாமியாசியே என்ற குடும்பத்தை சேர்ந்ததாகும். இந்த செடியின் தாயகம் இந்தியவாகும். ஓமவல்லியின் அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ் என்பதாகும்.
இந்த செடியில் உள்ள இலைகள் 4 முதல் 7 செ.மீ நீளமும் மற்றும் 4 முதல் 6 செ.மீ வரை நீளமும் கொண்டுள்ளதாகும். மேலும் ஓமவல்லி செடியில் உள்ள தண்டுகள் தோராயமாக 30 முதல் 90 செ.மீ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய ஓமவல்லி செடி பெரும்பாலும் அனைவருடைய வீட்டிலும் ஒரு மூலிகை செடியாக வளர்க்கப்பட்டு வருகிறது. மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் ஓமவல்லி செடியானது அதிக நறுமணத்துடன் காணப்படுகிறது.
ஓமவல்லி இலையில் உள்ள சத்துக்கள்:
ஓமவல்லி இலையில் 10-க்கும் மேற்ப்பட்ட சத்துக்களை நிறைந்து உள்ளது.
- வைட்டமின் A
- வைட்டமின் B6
- வைட்டமின் C
- கால்சியம்
- பொட்டாசியம்
- இரும்புச்சத்து
- ஆன்டி ஆக்ஸைடு
- சோடியம்
- கார்போ ஹைட்ரேட்
- கொழுப்பு
- மெக்னீசியம்
- புரோட்டின்
- நார்ச்சத்து
வீட்டில் செம்பருத்தி செடி வைத்திருக்கும் அனைவருக்கும் இது தெரியாத..! அப்போ உடனே தெரிஞ்சுக்கோங்க.. |
ஓமவல்லி இலை பயன்கள்:
உடலில் ஏற்படும் அஜீரண கோளாறு பிரச்சனையை உடனடியாக குணப்படுத்துவதற்கு ஓமவல்லி இலை நல்ல பலனை அளிக்கிறது.
அதுபோல குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் இருமல் மற்றும் சளி தொல்லைகளில் இருந்து விடுபட செய்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ செய்கிறது.
இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு ஓமவல்லி இலை பயன்படுகிறது. ஏனென்றால் இதில் உள்ள நார்ச்சத்து தான் அதற்கு உதவுகிறது.
தினமும் ஓமவல்லி இலையினை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படும் மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறைவதற்கு உதவியாக இருக்கும்.
சுவாச பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதற்கு சிறந்த தீர்வினை ஓமவல்லி இலை அளிக்கிறது. இயற்கையாக கிடைக்கக்கூடிய ஓமவல்லி இலையில் நிறைய சத்துக்கள் உள்ளது.
மேலும் ஓமவல்லி இலை வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
நரை முடி பிரச்சனைக்கு ஓமவல்லி இலை:
தலையில் காணப்படும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு ஓமவல்லி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கவும் மற்றும் பொலிவு இழந்து காணப்படும் முகத்தினை பொலிவு பெற செய்யவும் ஓமவல்லி இலை பயன்படுத்தப்படுகிறது.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |