இத்தனை நாளா வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்தியும் இதை தெரிஞ்சிக்காம விட்டுட்டோமே..!

Onion Multipurpose in Tamil

இன்றைய பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகின்றேன். ஏனென்றால் இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்று நீங்கள் சிந்தனை செய்வது புரிகின்றது. அது என்ன தகவல் என்றால் வெங்காயத்தில் உள்ள பல வகையான பயன்களை பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

வெங்காயத்தில் அப்படி என்ன பயன்கள் உள்ளது என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களுக்கான பதில் தெளிவாக கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் வெற்றிலை செடியை வளர்க்கிறீர்களா அப்போ இதை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க

வெங்காயத்தின் பல்வேறு பயன்கள்:

சமையலில் வெங்காயம்:

Onion benefits in tamil

பொதுவாக வெங்காயம் என்றாலே நாம் அனைவரின் மனதிலேயும் முதலில் நினைவிற்கு வருவது அதன் சமையல் பயன்பாடு மட்டும் தான். இந்திய பாரம்பரிய உணவுகளில் வெங்காயம் பயன்படாமல் ஒரு உணவு கூட இருக்காது.

அதிலும் குறிப்பாக இதனை பயன்படுத்தி வெங்காய சாம்பார், வெங்காய ரசம் மற்றும் வெங்காய பஜ்ஜி போன்றவை சமைக்கப்படுகின்றது. மேலும் இந்த வெங்காயத்தின் இலை கூட சமையலில் ஒரு சுவையூட்டியாக பயன்படுகின்றது.

மருத்துவத்தில் வெங்காயம்: 

பொதுவாக வெங்காயத்தை சமையலுக்கு பயன்படுத்துவதில் உள்ள இரகசியமே இதில் பல வகையான சத்துக்கள் உள்ளதால் இது நமது உடலுக்கு மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பதால் தான்.

இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள சூட்டினை குறைக்கும். 4-5 வெங்காயத்தை எடுத்து அதனுடைய தோலை உரித்து விட்டு அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் நீங்கும்.

வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலை சாற்றை கலந்து காதில் விட, காது வலி குறையும். வெங்காயம் மட்டுமில்லாமல் அதன் தோலிலும் பல நன்மைகள் உள்ளது.

 அதாவது வெங்காயத்தோலை தேநீர் போல செய்து குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கும் மற்றும் பல நாளாக தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக திகழும். 

இதுபோன்று பல நன்மைகள் வெங்காயத்தில் உள்ளது அவையவையும் அறிந்துக் கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள் 👇

வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா

அழகை மேம்படுத்துவதில் வெங்காயம்:

வெங்காயத்தை நன்கு அரைத்து வாரம் இரு முறை என தொடர்ந்து தலையில் தடவி குளித்து வருவதன் மூலம் உங்களின் தலையில் உள்ள பொடுகு நீங்கும் மேலும் தலைமுடியும் நன்கு ஆரோக்கியத்துடன் வளரும்.

மேலும் வெங்காய தோலை 1 கைப்பிடி அளவு எடுத்து நன்கு வறுத்து பொடியாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை ஜெல்லுடன் கலந்து தலையில் தடவினால் உங்கள் தலையில் உள்ள நரைமுடி மறையும்.

அதே போல் வெங்காயத்தோலை தேநீர் போல செய்து குடிப்பதன் மூலம் உங்கள் தலைமுடி நன்கு வளரும்.

உரமாக வெங்காயம்:

பொதுவாக நாம் சமையலுக்கு வெங்காயத்தை பயன்படுத்தும் பொழுது அதனுடைய தோல்களை நீக்கி அதனை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் இனிமேல் அப்படி வீணாக்காமல் அதனை தண்ணீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை தாவரங்களுக்கு ஊற்றினால் அது நன்கு வளரும்.

இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> உங்கள் வீட்டில் மாமரம் இருக்கா அப்படியென்றால் இந்த விஷயம் தெரிந்திருக்கவேண்டுமே

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose