உங்கள் வீட்ல பல வருஷமா புளிமரம் இருக்கு சரி… ஆனா அந்த மரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா ..?

tamarind tree multi purpose in tamil

Tamarind Tree Multi Purpose  

அனைவருடைய வீட்டிலும் சாப்பாட்டிற்கு என்று சில அத்தியாவசியமான பொருட்களை பயன்படுத்துவோம். அந்த பொருட்கள் இல்லை என்றால் நம்மால் சமைத்து சாப்பிடவே முடியாது. இத்தகைய அத்தியாவசிய பொருள்களில் புளியும் ஒன்று. நம்முடைய வீட்டில் சமைக்கும் அதிகமான சாப்பாட்டில் புளி சேர்த்து சமைப்பது வழக்கமான ஒன்று. அத்தகைய புளியினை சிலர் கடையில் வாங்குகின்றனர். ஒரு சிலர் அவருடைய வீட்டிலேயே மரமாக வளர்த்து வருகின்றனர். அதுவும் கிராம புறங்களில் பார்த்தோம் என்றால் நிறைய புளிய மரங்கள் உள்ளது. ஆகவே இன்று புளிய மரத்தின் Multi Purpose பற்றி தான் நம்முடைய பொதுநலம்.காம் பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. 

புளிய மரம்:

புளிய மரமானது பேபேசி என்ற குடும்பத்தை சேர்ந்த ஒரு மரம் ஆகும். இந்த மரமானது 25 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. அதுமட்டும் இல்லாமல் பச்சையான இலைகளும் மிகவும் அடர்த்தியாகவும் காணப்படும்.

மேலும் இந்த மரமானது அனைத்து வகையான மண்ணிலும் வளரும் தன்மை கொண்டுள்ளது. இத்தகைய புளிய மரமானது அதிக நாட்கள் வாழும் திறன் கொண்டது.

புளிய பூ:

புளியம் பூ

நாம் எப்போது புளியினை தான் அதிகமாக சமையலுக்கு பயன்படுத்துவோம். ஆனால் புளியில் உள்ள சத்துக்களை போலவே புளிய பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இது நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் உள்ளது.

  • செரிமான கோளாறு
  • கீழ்வாதம்
  • உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம்

புளியம் பிஞ்சு:

புளியம் பழத்தினை சமையலுக்கு பயன்படுத்துவது போல புளியம் பிஞ்சினை வைத்து துவையல் அரைத்து சாப்பிடுகின்றனர்.

புளியம் பழத்தில் உள்ள சத்துக்கள்:

புளியம் பழம்

  1. கால்சியம்
  2. தாதுக்கள்
  3. இரும்புசத்து
  4. வைட்டமின்கள்

புளியம் பழம் எதற்கு எல்லாம் பயன்படுகிறது:

புளிய மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய புளியம் பழமானது மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் சமையலுக்காக அதிக அளவு பயன்படுத்த படுகிறது. அதிலும் குறிப்பாக பார்த்தால் புளிசாதம், புளிக்குழம்பு இவை இரண்டிற்கும் அதிகமாக பயன்படுத்த படுகிறது.

வீட்டில் இருக்கும் பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை பளிச்சென்று வைப்பதற்கு புளியம் பழம் தான் உபயோகப்படுத்த படுகிறது.

நம்முடைய கைகளுக்கு மருதாணி அரைக்கும் போது கை நன்றாக சிவக்க வேண்டும் என்பதற்காக புளியினை பயன்படுத்துகிறார்கள்.

துளசி செடி வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா. 

புளியக்கொட்டை:

புளியக்கொட்டை

 புளியங்கொட்டையில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் நியாசின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து உள்ளது.  

பற்களில் ஏற்படும் கறையினை சுத்தும் செய்வதற்கு புளியகொட்டை பயன்படுகிறது.

நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு புளிய கொட்டை பவுடர் பயன்படுத்த படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் முகத்தில் பாக்டீரியா தொற்றுகள் எதுவும் வராமல் இருப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் பொட்டாசியம் சத்து உள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்கவும் மற்றும் இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனை வராமலும் இருக்க செய்கிறது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose