Thuthuvalai Multi Purpose
பொதுவாக வீடு என்றால் நிறைய செடி மற்றும் கொடிகள் வளர்ப்பது இயற்கையான ஒன்று. அதிலும் குறிப்பாக பார்த்தால் அனைவருடைய வீட்டிலும் ஓமவல்லி, கற்றாழை, மருதாணி, செம்பருத்தி, துளசி மற்றும் தூதுவளை என அனைத்தினையும் வளர்த்து வருவார்கள். இப்படி நாம் வளர்த்து வரும் செடிகள் அனைத்தினையும் நாம் ஆரோக்கியம் சம்மந்தமாக சாப்பிட்டு வருகிறோம். ஆனால் நம்முடைய வீட்டில் இருக்கும் ஒரு சாதாரணமான பொருள் கூட பல்நோக்கு முறையில் பயன்படும் வகையில் உள்ளது. ஆகாயல் இன்று தூதுவளையின் Multi Purpose பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும் தூதுவளை இதற்கு எல்லாம் பயன்படுகிறதா என்று..
இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..
தூதுவளை செடி:
தூதுவளை ஒரு சிறந்த மூலிகை செடியாகும். இத்தகைய செடியானது கத்தரிக் குடும்பம் என்ற குடும்பத்தை சேர்ந்ததாகும். மேலும் இந்த செடியானது இந்தியா மற்றும் வேறு சில நாடுகளிலும் காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தான் அதிக அளவு காணப்படுகிறது.
இத்தகைய தூதுவளை செடியானது கருப்பு பச்சை நிறத்திலும் அதன் மேல் சிறிய சிறிய முள்களையும் கொண்டுள்ளதாகும்.
தூதுவளை இலையில் உள்ள சத்துக்கள்:
தூதுவளையில் நிறைய சத்துக்கள் உள்ளது. அதனால் தான் தூதுவளை ஒரு மூலிகையாக பயன்படுகிறது.
- இரும்புசத்து
- நார்ச்சத்து
- கொழுப்புசத்து
- புரதச்சத்து
- சுண்ணாம்புச்சத்து
- நீர்ச்சத்து
- பாஸ்பரஸ்
- தாது சத்து
- சர்க்கரை சத்து
- கால்சியம்
தூதுவளை எதற்கு எல்லாம் பயன்படுகிறது:
- சளி மற்றும் இருமல்
- ஆஸ்துமா
- மூக்கில் நீர் வடிதல்
- நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைக்க
- பசியின்மை
- தும்மல்
- மூக்கில் நீர் வடிதல்
- உடலில் இருக்கும் கொழுப்பினை நீக்க
- தொண்டையில் ஏற்படும் பிரச்சனை
- இரத்த ஓட்டம் சீராக
மேலே சொல்லபட்டுள்ள பிரச்சனைகள் மட்டும் இல்லாமல் வேறு சில பிரச்சனைகளையும் சரி செய்யும் ஒரு மருந்தாக தூதுவளையின் இலை பயன்படுத்த படுகிறது. மேலும் இந்த தூதுவளை இலையுடன் சில பொருட்கள் சேர்த்து பிரச்சனைக்கு ஏற்றவாறு மருந்தாக உபயோகப்படுத்துகின்றனர்.
வீட்டில் செம்பருத்தி செடி வைத்திருக்கும் அனைவருக்கும் இது தெரியாத..! அப்போ உடனே தெரிஞ்சுக்கோங்க.. |
தூதுவளை இலை பொடி:
தூதுவளை இலை பொடியானது வறட்டு இருமலையும் மற்றும் பித்தத்தினையும் குணப்படுத்த பயன்படுகிறது.
உடலில் ஏற்படும் இரத்த சோகையினை குணப்படுத்துவதற்கு இந்த இலையின் உடைய பொடியினை தான் பயன்படுத்துகிறார்கள்.
அதுபோல வாயு மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைக்கும் இது தீர்வாக உள்ளது.
தூதுவளை இலை ஜூஸ் பயன்கள்:
இந்த இலையில் கால்சியம் சத்து இருப்பதால் இது எலும்புகள் மற்றும் உடலை பலம் பெற செய்ய இந்த இலையில் இருந்து கிடைக்கக்கூடிய ஜூஸ் பயன்படுகிறது.
உடலில் ஏற்படும் இரைச்சல் போன்றவற்றையும் குணப்படுத்துகிறது.
மேலும் இந்த தூதுவளையினை துவையல், சட்னி, தோசை, ஜூஸ் மற்றும் ரசம் என பலவற்றைக்கு பயன்படுத்துபடுகிறது.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |