துளசி பயன்கள்
துளசி மாடம் இல்லாத வீடுகளே இல்லை. அனைவரும் வீட்டிலும் வைத்து வழிபடுகிறார்கள். இன்னும் துளசியை பற்றி சொன்னால் சளி பிரச்சனைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கும் என்று தெரியும். ஆனால் துளசி பற்றி இன்னும் நமக்கு தெரியாத விஷயம் நிறைய இருக்கிறது. அதனால் இந்த பதிவில் துளசி பற்றி நமக்கு தெரியாத விஷயத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
100 கிராம் துளசியில் உள்ள சத்துக்கள்:
- கலோரிகள- 22
- மொத்த கொழுப்புகள்- 0.6 கிராம்
- கார்போஹைட்ரேட்டுகள்- 2.7 கிராம்
- நார்ச்சத்து- 2.7 கிராம்
- சர்க்கரைகள்- 0.3 கிராம்
- புரதம்- 3.2 கிராம்
- சோடியம்- 4 மி.கி
- பொட்டாசியம்- 295 மி.கி
துளசி இலையில் ஒளிந்திருக்கும் அற்புதமான அழகு குறிப்புகள் உங்களுக்கு தெரியுமா..?
துளசி மருத்துவ குணங்கள்:
துளசி செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் பசியை தூண்டும், இரைப்பை மற்றும் குடல் சம்மந்தப்ட்ட நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது.
இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் துளசியை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது. துளசி இலையை போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நெருங்காது.உடல் எடையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. இதற்கு துளசி சாறு சாறு வைத்து தினமும் குடித்தால் பலனை காணலாம்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் திறன் உள்ளது. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசி கஷாயம் கொடுத்தால் போதும்.
அழகிற்கு துளசி:
துளசி சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது.
முகப்பருவை நீக்க உதவுகிறது, சருமத்தில் இருக்கும் பள்ளங்களை நீக்கவும் பயன்படுகிறது.
வாய் துர்நாற்றத்தை போக்கும் குணம் துளசியில் உள்ளது. நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். உடலின் வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முதல் நாளே சிறிதளவு துளசி இலையை போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
முடி உதிர்வு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. முடி நரைப்பதை தடுத்து, முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் இருப்பதற்கு உதவுகிறது.
தினமும் 2 கப் துளசி டீ குடித்து வந்தால் வயதான தோற்றம் ஏற்படாமல் இளமையாகவே வைத்திருக்கும்.
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |