உங்க வீட்ல வல்லாரை கீரை இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

Vallarai Keerai Multi Purpose 

பொதுவாக கீரை வகைகள் என்றாலே அதில் நிறைய சத்துக்கள் இருக்கும். அதனால் நம்முடைய வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் என அனைவரும் கீரை வகையினை சாப்பிடுவோம். அதுவும் சின்ன குழந்தைகள் சாப்பிடவில்லை என்றால் எப்படியாவது சாப்பிட வைத்து தான் வேறு வேலையினை பாப்போம். பல சத்துக்கள் அடங்கிய கீரையினை நாம் உணவில் மட்டும் சேர்த்துக்கொள்வோம். ஆனால் அதில் நமக்கு தெரியாத நிறைய விஷயங்கள் உள்ளது. ஆகையால் இன்று அனைவருடைய வீட்டிலும் உள்ள வல்லாரை கீரையின் Multi Purpose பற்றி தான் பார்க்கப்போகிறோம். மேலும் இந்த பதிவானது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் ஒரு பொருள் இத்தனை சிறப்புகளை கொண்டுள்ளது நிறைய நபர்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். சரி வாருங்கள் பதிவை படித்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. 

வல்லாரை கீரை:

வல்லாரை கீரையானது அனைத்து வீடுகளிலும் பெரும்பாலும் வளர்க்கப்படும் ஒரு கீரை வகையாகும். மேலும் இந்த கீரையானது உணவாக மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த மூலிகையாகவும் பயன்படுகிறது.

இத்தகைய கீரையானது மேக்கின்லேயேசியே என்ற குடும்ப வகையினை சேர்ந்தவையாகும். மேலும் இந்த கீரையானது ஆஸ்திரேலியா மற்றும் ஆசியா ஆகிய நாடுகளை தாய் நாடாக கொண்டதாகும்.

வல்லாரை கீரையின் சத்துக்கள்:

வல்லாரை கீரை

பெரும்பாலும் அனைவருடைய வீட்டிலும் வளர்க்க கூடிய வல்லாரை கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது.

  • சுண்ணாம்புச்சத்து
  • நார்ச்சத்து
  • இரும்புசத்து
  • உயிர்சத்து
  • தாதுக்கள்

வல்லாரை கீரை எதற்கு எல்லாம் பயன்படுகிறது:

நம்முடைய ஞாபக சக்தியினை அதிகரிக்க வைப்பதற்கு  வல்லாரை கீரை ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் இந்த கீரையானது காய்ச்சல், சளி மற்றும் இருமல் போன்ற பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.

வல்லாரை கீரை வாய் புண், செரிமான கோளாறு மற்றும் வாய் துருநாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலனை அளித்து அதிலிருந்து விடுபடச் செய்கிறது.

மேலும் வல்லாரை கீரை கண் பார்வை, எலும்புகள் பலம் பெற, குடல் புண், இரத்த சோகை, பற்களில் உள்ள கறை மற்றும் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலி என எண்ணற்ற நோய்களுக்கு சிறந்த தீர்வினை அளிக்க உள்ளது.

உடலில் ஏற்படும் புண், மூட்டு வலி, கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றிற்கும் வல்லாரை கீரை ஒரு மூலிகை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

துளசி செடி வைத்திருப்பவர்களுக்கு இந்த விஷயம் தெரியுமா. 

வல்லாரை கீரை பொடி பயன்கள்:

வல்லாரை கீரை பொடி பயன்கள்

  • வாந்தி
  • அல்சர்
  • வாயு பிரச்சனை
  • நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டுக்குள் வைத்தல்
  • உடலில் ஏற்படும் அலர்ஜி

வல்லாரை கீரை மட்டும் இல்லாமல் அதிலிருந்து செய்யக்கூடிய பொடியிலும் நம்முடைய தேவையான சத்துக்கள் உள்ளது.

வீட்டில் வல்லாரை கீரை பயன்படுத்தும் முறை:

  1. வல்லாரை கீரை சாம்பார்
  2. கூட்டு
  3. ரசம்
  4. இட்லி பொடி
  5. துவையல்

வல்லாரை கீரை பெரும்பாலன வீடுகளில் மேலே சொல்லபட்டுள்ள முறைகளில் சமையலாக செய்து சாப்பிடுகின்றனர்.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose 
Advertisement