மாங்காய் பற்றிய தகவல்
நாம் அனைவருக்குமே மாங்காய் என்றால் பிடிக்கும். இதனை குழம்பில் சேர்த்து சாப்பிடுவோம், பச்சடியாக செய்து சாப்பிடுவோம். இந்த மாங்காயில் நன்மைகள் உள்ளது என்று அனைவரும் அறிந்தது. சத்துக்கள் ஏராளமாக இருக்கிறது என்பதும் அனைவரும் தெரிந்தது. அதனை சமையலுக்கு மட்டும் தான் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறீர்கள்.ஆனால் இத்தனை நிறைய விதமாக பயன்படுத்தலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவை முழுமையாக படுத்து தெரிந்து கொள்ளவும்.
மாங்காவை பற்றி தெரியுமா.?
மா மரத்தின் வரலாறு வெண்கல யுகத்திற்கு முந்தையது. அல்லது கிட்டத்தட்ட 4,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த மாமரம் தெற்கு ஆசியாவை, குறிப்பாக கிழக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்த துறவிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு தான் இது போர்த்துகீசியர்களால் ஆப்பிரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டது.
ஓமவல்லி செடியில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா..! இது தெரியாம போச்சே..!
ஆங்கில வார்த்தையான ‘மாம்பழம்’ என்பது பழத்தின் மலையாளப் பெயரின் தழுவல் ஆகும். இது “மாங்கா” ஆகும். இந்த மாம்பழம் அனகார்டியேசி அல்லது முந்திரி குடும்பத்தைச் சேர்ந்த மாம்பழத்தின் அறிவியல் பெயர் Mangifera indica ஆகும்.
இந்தியாவில் அதிகளவு காணப்படும் மாம்பழங்களை பற்றி பார்க்கலாம் வாங்க..! பங்கன பள்ளி, அல்போன்சா மாம்பழம், பாதாமி மாம்பழம், தசேரி மாம்பழம், கேசர் மாம்பழம், மல்கோவா மாம்பழம், மல்லிகா மாம்பழம், ராஸ்புரி மாம்பழம், செந்தூரம் மாம்பழம் போன்ற பழங்கள் உள்ளன. இந்தியாவில் சுமார் 1500 வகையான மாம்பழம் மரங்கள் வளர்க்கப்படுகிறன்றன. ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு தனி சுவையை கொண்டுள்ளது.
மாங்காய் விதை நன்மைகள்:
மாம்பழ விதையிலிருந்து கிடைக்கும் மாம்பழ வெண்ணெயை சருமத்தில் தடவினால் வெயில்காலத்தில் ஏற்படும் தீ காயங்கள் ஆறும். தீ காயங்கள் ஏற்படமால் தவிர்க்க உதவுகிறது. தழும்புகளை குணப்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் முடியும். இது முடிக்கு மாய்ஸ்சரைசராகவும் பயன்படுத்தலாம். மாம்பழ விதை சாற்றை உட்கொள்வது உடல் எடையை குறைக்கவும், உடல் பருமனை குறைக்கவும் உதவியாக உள்ளது.
மாம்பழத்தை பறித்தவுடன் அதில் வரும் பால் அதனை எடுத்து தேனீ கொட்டிய இடத்தில் தேய்த்தால் வீக்கம் குறையும். வலியும் குறையும்.
உங்க வீட்டு பக்கத்துல நொச்சி இருக்கா.. அப்போ நொச்சி பற்றிய இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க…
மரத்தில் சிறிய சிறிய பசை போல் காணப்படும். அதனை எடுத்து பித்த வெடிப்புகளில் அப்ளை செய்தால் குணமாகும். அதேபோல் சிரங்கு நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவலாம்.
இந்த மாமரத்தில் பட்டையானது நிறைய விதமாக பயன்படுகிறது. காய்ந்த மா பட்டையை எடுத்து காயவைத்து பொடி செய்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.மேலும் விறகு எரிக்கவும் அதேபோல் ஹோமம் வளர்க்கவும் இதை பயன்படுத்துகின்றனர்.
மேலும் இதன் விளைவாக, ஒரு நாளைக்கு சில முறை மா இலைகளைக் கொண்டு தேநீர் குடிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
இளஞ்சிவப்பு அல்லது ஊதா நிறத்தில் இருக்கும் இளஞ்சிவப்பு மா இலைகளில் டானின்கள் மற்றும் அந்தோசயினின்கள் நிறைந்துள்ளன. இந்த மா இலைகளின் சாறு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
மோசமான வாய்வழி சுகாதாரம் அல்லது ஈறுகளின் நோய்கள் வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கும். ஆகவே மா இலைகளை சுத்தம் செய்து, தண்ணீர் சிறிது மஞ்சள் நிறமாக மாறும் வரை தண்ணீரில் கொதிக்க வைக்கவும். அதில் சிறிது உப்பு கொண்டு வாய் கொப்பளித்து வருவதன் மூலம் ஈரல்கள் பிரச்சனை இருக்காது.மாம்பழம் இலையை வெதுவெதுமான நீரில் முதல் நாள் இரவே ஊறவைத்து காலையில் எழுந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா.
மாங்காயின் நன்மைகள்:
இரத்த சோகையை தடுக்கும்
செரிமானத்தை மேம்படுத்துகிறது
உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கண் பார்வையை மேம்படுத்தும்
இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது
மாமரத்தின் ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்கு ஆகும். அதனுடைய தலைமுறைக்கும் நம்முடைய தலைமுறைக்கும் அதனுடைய பயன்களை அளிக்கிறது. மாமரத்தை பற்றி பேசினால் மனிதர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவி செய்கிறது. அது மருத்தவ ரீதியாகவும் உதவுகிறது. மாங்காய் மரம் இருந்தா கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |