துளசியை பயன்படுத்தினால் மட்டும் போதாது இதுவும் தெரிஞ்சிருக்கணும்..!

Advertisement

Multi Uses of Tulsi in Tamil

இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி இருக்கும். அதாவது நமது அன்றாட வாழ்க்கையில் பல வகையான பொருட்களை பயன்படுத்துவோம். அப்படி நாம் பயன்படுத்தும் பல பொருட்களின் ஒரே ஒரு பயன்பாடு மட்டும் தான் நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அதனை நம்மால் பல வகையில் பயன்படுத்தி கொள்ள முடியும். ஆனால் அது நமக்கு தெரிந்திருக்காது.  அதனால் தான் நமது பதிவின் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் பல்வேறு பயன்பாட்டை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் துளசியின் பல வகையான பயன்கள் பற்றி தான் அறிந்து கொள்ள  இருக்கின்றோம். துளசியில் அப்படி என்ன பல வகையான பயன்கள் நமக்கு கிடைக்கும் என்று தானே சிந்தனை செய்கிறீர்கள். இன்றைய பதிவை முழுதாக படித்தால் உங்களின் மனதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதில் கிடைக்கும். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்லலாம்.

துளசியின் பல்வேறு பயன்கள்:

Multi uses of tulsi leaves intamil

பொதுவாக நமது முன்னோர்களின் காலகட்டத்தில் துளசிமாடம் இல்லாத ஒரு இடம் கூட பார்க்க முடியாது. ஏனென்றால் துளசியின் பயன்கள் அனைத்தையுமே நமது முன்னோர்கள் அறிந்திருந்தார்கள்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் துளசி பயன்பாடு பற்றி நாம் பாதியளவு மட்டுமே அறிந்து வைத்திருக்கின்றோம். அதனால் தான் துளசியின் பல்வேறு பயன்களை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

முட்டை முடிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லதுன்னு தெரியும் ஆனால் இந்த விஷயத்தையும் தெரிஞ்சிக்கோங்க

உணவில் துளசி: 

பொதுவாக துளசி என்றவுடன் நம்மில் பலருக்கும் முதலில் நினைவிற்கு வருவது அதன் மருத்துவ குணங்கள் தான். ஆனால் நம்மில் ஒரு சிலருக்கு அதன் உணவு பயன்பாடு தான் முதலில் நினைவிற்கு வரும்.

அதாவது துளசியினை பயன்படுத்தி துளசி டீ, துளசி ஜூஸ் போன்றவை தயாரித்து பருகப்படுகிறது.

துளசியின் ஊட்டச்சத்துக்கள்:

முதலில் 100 கிராம் துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்களை அறிந்து கொள்வோம். அதாவது 100 கிராம் துளசியில்,

  • கலோரிகள- 22
  • மொத்த கொழுப்புகள்- 0.6 கிராம்
  • கார்போஹைட்ரேட்டுகள்- 2.7 கிராம்
  • நார்ச்சத்து- 2.7 கிராம்
  • சர்க்கரைகள்- 0.3 கிராம்
  • புரதம்- 3.2 கிராம்
  • சோடியம்- 4 மி.கி
  • பொட்டாசியம்- 295 மி.கி ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இத்தனை நாளா இதை தெரிஞ்சுக்காமலே கொண்டைக்கடலையை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே

ஆரோக்கியத்தில் துளசி:

Multi uses of tulsi plant in tamil

துளசி செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் பசியை தூண்டும், இரைப்பை மற்றும் குடல் சம்மந்தப்ட்ட நோய்களுக்கு தீர்வாக இருக்கிறது. மேலும் இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் துளசியை சாப்பிடுவதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

அதாவது துளசி இலையை போட்டு ஊற வைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நெருங்காது. அதேபோல் துளசி சாற்றினை தினமும் குடிப்பதன் மூலம் உடல் எடை குறையும்.

சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர சிறுநீர் பிரச்சினைகள் விரைவில் சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் திறன் உள்ளது.

சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசி கஷாயம் கொடுத்தால் போதும்.

அழகை மேம்படுத்துவதில் துளசி:

பொதுவாக துளசி சருமத்தை பொலிவாக வைத்து கொள்ள உதவுகிறது. முகப்பருவை நீக்க, பள்ளங்களை நீக்கவும் பயன்படுகிறது. மேலும் வாய் துர்நாற்றத்தை போக்கும் குணம் துளசியில் உள்ளது.

மேலும் நமது உடலுக்கான கிருமி நாசினியாக கூட துளசி செய்யப்படுகிறது. அதாவது டலின் வியர்வை நாற்றத்தை தவிர்க்க குளிக்கும் நீரில் முதல் நாளே சிறிதளவு துளசி இலையை போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் மற்றும் கிருமிகள் நீங்கும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு பேஸ்ட்டாக அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். மேலும் முடி உதிர்வு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. முடி நரைப்பதை தடுத்து, முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் இருப்பதற்கு உதவுகிறது.

தினமும் 2 கப் துளசி டீ குடித்து வந்தால் வயதான தோற்றம் ஏற்படாமல் இளமையாகவே வைத்திருக்கும்.

இலவங்கப்பட்டையை சாப்பாட்டில் சேர்த்து கொள்வதற்கு முன் இதை தெரிஞ்சிக்கோங்க

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement