Karpooravalli Plant Multiuse
நாம் அனைவரும் அதிகமாக ஓமவல்லி இலையினை பற்றி கேள்வி பட்டிருப்போம். அதிலும் ஒரு சிலர் வீட்டில் நிறைய மூலிகை செடியினை வளர்ப்பார்கள். அத்தகைய செடிகளில் ஓமவல்லி செடியினையும் வளர்ப்பார்கள். ஏனென்றால் ஓமவல்லி ஆனது ஒரு சிறந்த மூலிகையாக விளங்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில் பார்க்கும் போது ஓமவல்லி இலையினை பற்றி நாம் இதுநாள் வரையிலும் மூலிகை மருந்தாக மட்டுமே அதிகமாக அறிந்து இருப்போம். ஆனால் இவ்வாறு நாம் நினைத்து கொண்டிருப்பதற்கு மாறாக ஓமவல்லி இலையில் எண்ணற்ற திறன்கள் உள்ளது. இதனை ஆங்கிலத்தில் ஒரு பொருளில் உள்ள நிறைய Multiuse என்று கூறுவார்கள். அதனால் இன்று ஓமவல்லி இலை அல்லது கற்பூரவள்ளி இலையின் வெவ்வேறு திறன்களை பற்றி தெரிந்துக்கொள்ள போகிறோம்.
ஓமவல்லி செடி பற்றிய தகவல்:

இந்த செடியில் உள்ள இலைகள் 4 முதல் 7 செ.மீ நீளமும் மற்றும் 4 முதல் 6 செ.மீ வரை நீளமும் கொண்டுள்ளதாகும். மேலும் ஓமவல்லி செடியில் உள்ள தண்டுகள் தோராயமாக 30 முதல் 90 செ.மீ வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
இத்தகைய ஓமவல்லி செடி பெரும்பாலும் அனைவருடைய வீட்டிலும் ஒரு மூலிகை செடியாக வளர்க்கப்பட்டு வருகிறது. மற்ற மூலிகை செடிகளை காட்டிலும் ஓமவல்லி செடியானது அதிக நறுமணத்துடன் காணப்படுகிறது.
ஓமவல்லி செடியானது லாமியாசியே என்ற குடும்பத்தை சேர்ந்ததாகும். இந்த செடியின் தாயகம் இந்தியவாகும். ஓமவல்லியின் அறிவியல் பெயர் பிளெக்ட்ரான்டஸ் அம்போயினிகஸ் என்பதாகும்.
மேலும் ஓமவல்லிக்கு கற்பூர வள்ளி என்ற மற்றொரு பெயரும் உள்ளது.
ஓமவல்லி இலை அழகு குறிப்புகள்:

தலையில் காணப்படும் நரை முடியினை கருப்பாக மாற்றுவதற்கு ஓமவல்லி இலையில் இருந்து கிடைக்கக்கூடிய பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் முகத்தில் காணப்படும் பருக்களை நீக்கவும் மற்றும் பொலிவு இழந்து காணப்படும் முகத்தினை பொலிவு பெற செய்யவும் ஓமவல்லி இலை பயன்படுத்தப்படுகிறது.
உங்க வீட்டு பக்கத்துல நொச்சி இருக்கா.. அப்போ நொச்சி பற்றிய இந்த விஷயத்தை தெரிஞ்சுக்கோங்க…
ஓமவல்லி இலை சத்துக்கள்:
- மெக்னீசியம்
- புரோட்டின்
- நார்ச்சத்து
- ஆன்டி ஆக்ஸைடு
- சோடியம்
- கார்போ ஹைட்ரேட்
- கால்சியம்
- பொட்டாசியம்
- இரும்புச்சத்து
- கொழுப்பு
- வைட்டமின் C
- வைட்டமின் B6
- வைட்டமின் A
ஓமவல்லி இலையின் மருத்துவ பயன்கள்:

- இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதற்கு ஓமவல்லி இலை பயன்படுகிறது. ஏனென்றால் இதில் உள்ள நார்ச்சத்து தான் அதற்கு உதவுகிறது.
- சுவாச பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதற்கு சிறந்த தீர்வினை ஓமவல்லி இலை அளிக்கிறது. இயற்கையாக கிடைக்கக்கூடிய ஓமவல்லி இலையில் நிறைய சத்துக்கள் உள்ளது.
- ஓமவல்லி இலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இருக்கும் இருமல் மற்றும் சளி தொல்லைகளில் இருந்து விடுபட செய்து ஆரோக்கியமான வாழ்க்கையினை வாழ செய்கிறது.
- அஜீரண கோளாறு பிரச்சனையை உடனடியாக குணப்படுத்துவதற்கு ஓமவல்லி இலை நல்ல பலனை அளிக்கிறது
- நாம் தினமும் ஓமவல்லி இலையினை சாப்பிட்டு வருவதன் காரணமாக நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து காணப்படும் மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறைவதற்கு உதவியாக இருக்கும்
- ஓமவல்லி இலை வாந்தி மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
குப்பையில் கிடக்கும் குப்பைமேனியில் இவ்வளவு விஷயம் இருக்கா.
ஓமவல்லி இலை சமையல்:
- பஜ்ஜி
- அடை
- ஓமவல்லி சட்னி
- ஓமவல்லி ரசம்
- கற்பூரவள்ளி கஷாயம்
- கற்பூரவள்ளி சூப்
| மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |







