சந்திர கிரகணம் 2022 எப்போது தெரியுமா?

santhira kiraganam

சந்திர கிரகணம் 2022 எப்போது? | Santhira Kiraganam 2022

ஹாய் பிரண்ட்ஸ் இந்த ஆண்டு முதல் சந்திர கிரகணம் என்பது நிகழப்போகிறது என்று உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கானதுதான்.. சந்திர கிரகணம் என்பது சந்திரனுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும் போது சந்திர கிரகணம் நிகழுகின்றது. அதாவது சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும் போது முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அதுவும் இல்லாம இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ​​’பிளட் மூன்’ அல்லது ‘இரத்த நிலவு’ போன்று காட்சியளிக்குமாம். சரி இந்த பதிவில் சந்திர கிரகணம் என்றால் என்ன? இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் எப்போது நிகழ இருக்கிறது. அதனை நாம் இந்தியாவில் பார்க்க முடியும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் தெளிவாக படித்தறிவோம் வாங்க.

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சந்திர கிரகணத்தின் போது, பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வந்து, சந்திரனின் மீது விழும் சூரிய ஒளியைத் தடுக்கிறது. இதுவும், இரண்டு வகையான சந்திர கிரகணங்களாகப் பிரிக்கப்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. சரி வாங்க நாம் இப்பொழுது நமது விஷயத்திற்கு வருவோம்.

இந்த 2022 ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் எப்போது வருகிறது தெரியும்?

மேற்கு அரைக்கோள நாடுகளில் வசிப்பவர்கள் வெவ்வேறு நேர மண்டலத்தின் படி, மே 15 மற்றும் 16 ஆம் தேதிகளில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணத்தைக் காண முடியும். நாசாவைத் தொடர்ந்து, கிரகணம் தெற்கு மற்றும் மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள், முழு தென் அமெரிக்கக் கண்டம், வட அமெரிக்காவின் பெரும்பகுதி மற்றும் ஒரு சில பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு இந்த சந்திர கிரகணம்  தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர கிரகணம் நேரம் 2022 – Santhira Kiraganam 2022:

இந்த சந்திர கிரகணம் நாசாவின் கூற்றுப்படி கிரகணம் மே 15 ஆம் தேதி அன்று இரவு 10:10 மணிக்கு (EDT) மற்றும் மே 16 ஆம் தேதி காலை 7:40 IST நேரத்தின் படி தொடங்கும். கூடுதலாக, இந்த கிரகணம் தென் மற்றும் வட அமெரிக்க நாடுகள், மேற்கு ஆப்பிரிக்காவின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் ஒரு சில மத்திய கிழக்கு நாடுகளில் முழுமையாகத் தெரியும். கிரகணம் மூன்று மணி நேரம் 27 நிமிடங்கள் நீடிக்கும், சந்திரன் ஒரு மணி நேரம் 25 நிமிடங்களுக்குக் கிரகணத்தை முழுவதுமாக அனுபவிக்கும். இந்நேரம் பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக மறைக்கிறது.

​​’பிளட் மூன்’ அல்லது ‘இரத்த நிலவு’ நிகழ்வு ஏற்படுவதறகான காரணம் என்ன செறியுமா?

பகுதி சந்திர கிரகணத்தின் போது, ​​’பிளட் மூன்’ என்றும் அழைக்கப்படும் சிவப்பு நிற சந்திரனை நட்சத்திர பார்வையாளர்கள் பார்க்க முடியும். பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் செல்லும்போது, ​​சந்திர கிரகணம் ஏற்படுகிறது. நாசாவைத் தொடர்ந்து, இது நிகழும் போது சந்திரன் ஒரு மங்கலான மற்றும் சிவப்பு நிறத்தில் மாறும். ஏனெனில், அந்த நேரத்தில் சந்திரன் முழுவதுமாக பூமியின் நிழலில் இருந்தாலும், சூரிய ஒளியின் சிவப்பு அலைநீளங்கள் பூமியின் வளிமண்டலத்தைக் கடந்து சந்திரனின் மேற்பரப்பில் விழுகின்றன. இதனால், நிலவு சிவப்பு நிறத்திற்கு மாறுகிறது.

2022-ஆம் ஆண்டில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் எத்தனை நிகழும் தெரியுமா?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil