எந்தெந்த பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு? விரிவான தகவல் இதோ

Advertisement

ஜிஎஸ்டி வரி பட்டியல் 2022 | GST Rate List 2022

வணக்கம் நண்பர்களே நாம் வாங்கும் ஒவ்வொரு பொருள்களுக்கும் நாம் மறைமுகமாக ஜிஎஸ்டி வரி கட்டிக்கொண்டு வருகிறோம் என்று அனைவருக்குமே தெரியும். அந்த வகையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.  எந்தெந்த பொருட்கள் என்று இப்பொழுது நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஜிஎஸ்டி வரி உயர்வு பட்டியல் 2022:

5 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட பொருட்களுக்கான GST வரி பட்டியர்கள்.

ஜிஎஸ்டி வரி பட்டியல் பழைய வரி புதிய வரி
சோலார் வாட்டர் ஹீட்டர் அதன் அமைப்பு, பூர்த்தி செய்யப்பட்ட அதன் தோல் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 5% 12%
விதைகள், உணவு தானியங்கள் சுத்தம் செய்யவும், அளவீடு செய்யவும் பயன்படுத்தும் பொருள்களுக்கு 5% 12%
மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் பணி ஒப்பந்தங்கள், கல்வி நிலையம், மருத்துவமனை போன்றவற்றின் பணி ஒப்பந்தங்களுக்கு  5% 18%

GST Rate List 2022

12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட பொருட்களுக்கான GST வரி பட்டியர்கள்.

ஜிஎஸ்டி வரி பட்டியல் பழைய வரி புதிய வரி
பிரிண்டிங் செய்வதற்காக எழுதவும், வரையவும் பயன்படுத்தப்படும் இங் மீதான ஜிஎஸ்டி வரி 12% 18%
கத்தியுடன் கூடிய கட்டிங் பிளேட், பேப்பர் கத்தி, பென்சில், சார்பினர், பிளேட், பேனா, ஸ்பூன், fork பொருட்களுக்கு  12% 18%
கிரைண்டர் 12% 18%
எல்இடி விளக்குகளுக்கு 12% 18%
வேளாண் கருவிகளை சுத்தம் செய்யும் இயந்திரங்களுக்கு 12% 18%

வைரம் மீதான ஜிஎஸ்டி வரி:

ஜிஎஸ்டி வரி பட்டியல் பழைய வரி புதிய வரி
வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களுக்கு 0.25% 1.5%

ஜிஎஸ்டி வரி உயர்வு பட்டியல் 2022

சோலார் வாட்டர் ஹீட்டர் அதன் அமைப்பு, பூர்த்தி செய்யப்பட்ட அதன் தோல் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக  உயர்த்தப்பட்டுள்ளது.

பிரிண்டிங் செய்வதற்காக எழுதவும், வரையவும் பயன்படுத்தப்படும் இங் மீதான வரி 12% இருந்து 18% வரை உயர்த்தப்பட்டுள்ளது. இவை தவிர கத்தியுடன் கூடிய கட்டிங் பிளேட், பேப்பர் கத்தி, பென்சில், சார்பினர், பிளேட், பேனா, ஸ்பூன், fork ஆகியவற்றுகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கிரைண்டர்களுக்கு 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

எல்இடி விளக்குகள் 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேளாண் கருவிகளை சுத்தம் செய்யும் இயந்திரங்களுக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி என்றால் என்ன?

 

விதைகள், உணவு தானியங்கள் சுத்தம் செய்யவும், அளவீடு செய்யவும் பயன்படுத்தும் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தோல் பொருட்கள் மற்றும் காலநி பொருட்கள் உற்பத்தியின் துணை பணிகள்மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் பணி ஒப்பந்தங்கள், கல்வி நிலையம், மருத்துவமனை போன்றவற்றின் பணி ஒப்பந்தங்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

வெட்டப்பட்ட மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 0.25 சதவீதத்திலிருந்து 1.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வு ஜூலை மாதம் 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Online-யில் GST Registration செய்வது எப்படி?

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement