தீபாவளி ஆஃபர்.. ஜியோ ஃபைபர் இணைப்பு 6 மாதங்களுக்கு முற்றிலும் இலவசம்..!

Advertisement

ஜியோ தீபாவளி சலுகை 2022 | Jio Diwali Offer 2022 

Jio Diwali Offer 2022 – இந்தியாவில் ஜியோ நிறுவனம் முன்னணி நெட்ஒர்க் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. குறைந்த விலையில் ஜியோ 4ஜி ஸ்மார்ட்போன், ஜியோ ஃபைபர் என பலவற்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த தீபாவளிக்கு ஜியோ தீபாவளி சலுகை 2022-ஐ அறிவித்துள்ளது. டபுள் பெஸ்டிவ் போனான்ஷா (Double Festival Bonanza) என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறலாம். இந்த அருமையான சலுகையை அக்டோபர் 18 முதல் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் புதிய ஜியோ ஃபைபர் இணைப்பை பெற்று ரூ. 599 திட்டத்தில் 6 மாத ரீசார்ஜ் அல்லது ரூ.899-ல் 6 மாத ரீசார்ஜ் திட்டத்தில் ஏதேனும் ஒன்றில் இணைந்தால் அவர்களுக்கென புதிய சலுகைகள் வழங்கப்பட உள்ளது.

தீபாவளி ஆஃபர் விவரம்:

இந்த தீபாவளி சலுகை மூலம் 100% VALUE BACK அதாவது அவர்கள் ரீச்சார்ஜ் செய்யும் சந்தாவிற்கான சமமான வால்யூ பேக் தரப்படும் அவற்றை பயன்படுத்தி ஏஜியோ, ரிலையம்ஸ் மார்ட் போன்ற இடங்களில் அதன் மதிப்பை பொருத்து நாம் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.

15 நாட்கள் கூடுதலான ஜியோ ஃபைபர் சேவையை பெற முடியுமாம். இந்த பிளான் குறித்த பலன்கள் மற்றும் விவரங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

ரூ.599 X 6 மாத திட்டம்:

இந்த திட்டத்தின் மூலம் ஆறு மாத சந்தாவை மொத்தமாக ரூ.4,241 (ரூ.3,594 + ரூ. 647 ஜிஎஸ்டி), செலுத்தினால் அதே மதிப்பில் வவுச்சர்களைப் பெற முடியும். ரூ.4,500 மதிப்புள்ள வவுச்சர்கள் 4 வெவ்வேறு பிராண்டுகளில் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.

AJIO இன் ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலின் ரூ. 1,000 வவுச்சர், NetMeds இன் ரூ.1,000 வவுச்சர் & IXIGO இன் ரூ.1,500 வவுச்சர் மற்றும் 15 நாட்கள் கூடுதலாக ஜியோ ஃபைபர் சேவை வசதி இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கும்

1 ரூ.899 X 6 மாத திட்டம்:

இந்த திட்டத்தின் கீழ் 6 மாத சந்தாவை மொத்தமாக ரூ. 6,365 (ரூ.5,394 + ரூ. 971 ஜிஎஸ்டி), செலுத்தினால் அதே மதிப்புள்ள வவுச்சர்களைப் பெற முடியும். ரூ. 6500 மதிப்புள்ள வவுச்சர்கள் 4 வெவ்வேறு பிராண்டுகளில் உள்ளன: AJIO இன் ரூ.2,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலின் ரூ.1,000 வவுச்சர், NetMeds இன் ரூ.500 வவுச்சர் &IXIGO இன் ரூ.3,000 வவுச்சர் மற்றும் 15 நாட்கள் கூடுதலாக ஜியோ ஃபைபர் சேவை வசதி கிடைக்கும். இந்த திட்டத்தில் மற்றொரு சலுகையும் வழங்கப்படுகிறது அதனை கீழ் காணலாம் வாங்க.

2 ரூ.899 X 6 மாத திட்டம்:

இந்த திட்டத்தின் கீழ் 3 மாத சந்தாவை மொத்தமாக ரூ. 2,697 (ரூ.3,182 + ரூ.485 ஜிஎஸ்டி) செலுத்தினால் ரூ.3500 மதிப்புள்ள வவுச்சர்களை பெற முடியும். ரூ.3,500 மதிப்புள்ள வவுச்சர்கள் 4 வெவ்வேறு பிராண்டுகளில் உள்ளன: AJIO இன் ரூ.1,000 வவுச்சர், ரிலையன்ஸ் டிஜிட்டலின் ரூ.500 வவுச்சர், NetMeds இன் ரூ.500 வவுச்சர் & IXIGO இன் ரூ.1,500 வவுச்சர்.

 

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News
Advertisement