திருப்பதி தரிசனம் காண குழந்தையுடன் செல்பவருக்கு ஒரு தகவல் – Tirupati darshan for new born baby
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1 வயதுக்குள்பட்ட குழந்தைகள் தரிசனத்திற்கான புது நடைமுறையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. ஆக 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இனி வரிசையில் நின்னோ, குடோவுனில் அடைந்திருந்தோ கஷ்டப்பட்டு தரிசனம் காண வேண்டிய அவசியம் இல்லை.
திருப்பதி கோயிலுக்கு ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்காக நடைமுறையை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 1 வயதுக்குள்பட்ட குழந்தைகளுடன் வரும் பெற்றோர் தெற்கு மாட வீதியில் திருமலை நம்பி சன்னதியை அடுத்து சுபதம் நுழைவாயில் வழியாக இலவச தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த முறையில் மாதம் ஒரு முறை கைக்குழந்தையை வைத்திருக்கும் நபர்கள் சென்று வரலாம். அதற்கு பக்தர்கள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகளை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
குழந்தையோடு திருப்பதிக்கு செல்பவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:
இந்த தரிசனத்திற்காக ஆதார் அட்டை அல்லது குழந்தையின் பிறப்புச் சான்றிதழை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
பெற்றோர் மற்றும் கை குழந்தையின் உடன்பிறந்தவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயம் கொண்டு செல்ல வேண்டும்.
இதில் கட்டாயம் உடன் வரும் உறவினர்களுக்கு அனுமதி கிடையாது.
தகுதியுடைய பக்தர்கள் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை சுபதம் நுழைவாயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
மாதத்தில் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.
இந்த தரிசனத்திற்கு டிக்கெட் அல்லது முன்பதிவு செய்ய வேண்டியதில்லை.
விடுமுறை நாட்கள், சிறப்பு விழாக்கள், பிரமோற்சவம் என பக்தர்கள் கூட்டம் அதிகம் உள்ள நாட்களில் இந்த தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பழனி முருகனுக்கு செய்யும் அலங்காரம் மற்றும் அதனுடைய நேரம் தெரியுமா.?
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |