தேளின் விஷம் கோடியில் விற்பனையாகிறது எப்படி தெரியுமா.?

Advertisement

தேள் விஷம் 

வணக்கம் நண்பர்களே.! தேளின் விஷம் கோடியில் விற்பனையாகிறது என்று நேற்று முதல் viral ஆகிக்கொண்டு இருக்கின்றது, இன்றைய பதிவில் அது என்ன என்று தெரிந்துகொள்வோம். பொதுவாக தேள் என்றாலே நமக்கு விஷம் பூச்சி என்று தான் நினைப்போம். தேள் விஷ பூச்சி தான் ஆனால் அது உயிருக்கு எந்த ஆபத்தையும் தராது. கடித்த இடம் ஓரு மூன்று நாளைக்கு வலி இருக்கும். ஆனால் தேளை இனப்பெருக்கம் செய்து அதிலுருந்து விஷத்தை எடுத்து விற்பனை செய்கிறார்கள். மேலும் விவரங்களை தெரிந்துகொள்வோம் வாங்க…

இதையும் கிளிக் செய்து படியுங்கள் ⇒ போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு..!

தேள் பண்ணை:

தேள் பண்ணை துருக்கியில் ஓரன்லர் என்பவர் நடத்தி வருகிறார். இவரது ஆய்வகத்தில் தினமும் 2 கிராம் தேளின் விஷம் எடுக்கப்படுகிறது. ஆய்வகத்தில் 20,000 திற்கும் மேற்பட்ட தேள்கள் உள்ளன. தேளுக்கு தேவையான உணவு அளித்து முறையாக பராமரித்து இனப்பெருக்கம் செய்து வைக்கிறார்கள். தேளிலுருந்து வரும் விஷத்தை உறைய வைத்து பொடியாக்கி ஐரோப்பாவில் விற்பனை செய்கிறார்கள்.

ஒரு தேளிலுருந்து 2 மி.கி விஷம் உள்ளது எனவும். தோராயமாக 300 அல்லது 400 தேள்களிலுருந்து 1 கிராம் விஷம் எடுக்கப்பட்டு, மொத்தம்  1 லிட்டர் தேளின் விஷம் 10 மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று பல ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகள் பதிவிடுகின்றன. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

மருத்துவத்தில் தேளின் விஷம்:

இந்த விஷமானது இருதய பைபாஸ் சிகிச்சைக்கு பெரிதும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறதே தவிர இன்னும் உறுதியான ஆய்வு நடத்தப்படவில்லை. மத்திய தென் அமெரிக்க நாட்டில் உள்ள தேள்களின் உள்ள கொடுக்குகளிருந்து எடுக்கப்படும் விஷத்தில், மார்கடாக்சின் (Margatoxin) என்ற பொருள் எடுத்து  உடலில் செலுத்துவதால் இதய செயலிழப்பை தடுக்கும் என்றும் அதுமட்டுமில்லாமல் இருதய சம்பந்தப்பட்ட சிகிச்சைக்கும் பெரிதும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.

தேள்களின் விஷம் அளவுக்கு மிகுந்த திறன் உள்ளதாக லீட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பேராசியர் மற்றும் டேவிட் பீச் கூறுகிறார்.நாம் எப்பொழுதும் பயன்படுத்தும் மருந்துகள் போல சாப்பிடவோ, சுவாசிக்கவோ, உடலில் ஊசி மூலமாகவும் பயன்படுத்த முடியாது. இதை நரம்புகளில் ஸ்ப்ரே வடிவத்தில் பயன்படுத்த முடியும்.

தேளின் விஷம் மருத்தவம் சார்ந்ததுக்கு பயன்படுத்தப்படும் என்று 2010 முதல் 2020 வரை நடந்த ஆய்வில் சொல்லப்படுகிறது. இது முழுக்க வெளிநாட்டில் நடத்தப்படும் ஆய்வு தகவலே தவிர எதுவும் நம் நாட்டில் (இந்தியா) உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை.

தேளின் விஷம் பயன்படுத்தப்படும் பொருட்கள்:

இப்போது தேளின் விஷம் வணிக பொருளாக மாறி கோடியில் விற்பனை ஆகிறது. தேளிலுருந்து எடுக்கப்படும் விஷம் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மருந்துகள், அழகு சாதன பொருட்கள், வலி மருந்துகள் போன்றவை தயாரிக்க பயன்படுகிறது.

 

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement