தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமல்

new electricity tariff 2022 in tamil nadu

மின் கட்டண உயர்வு 2022

தமிழ்நாட்டில் புதிய மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. அதுகுறித்த தகவல்களை இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம் வாங்க.

கடந்த ஜூலை மாதம் தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்து இருந்தார். இதற்கு கடந்த 10 ஆண்டுகளில் மின்சாரத்துறையில் ரூ.12,647 கோடி கடன் உயர்ந்ததும், மின் கட்டணங்களில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசு 28 முறை கடிதம் அனுப்பியதாகவும் காரணம் கூறப்பட்டது.

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருந்தார். அதன் படி, அனைத்து வீட்டு மின்நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

மேலும், 2 மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63.35 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(26.73 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.27.50-ம், 300 யூனிட்டுகள் வரை மின்நுகர்வு செய்யும் 36.25 லட்சம் வீட்டு மின்நுகர்வோர்களுக்கு(15.30 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.72.50-ம், 400 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 18.82 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு(7.94 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.147.50-ம், 500 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 10.56 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு (4.46 சதவீதம்) மாதம் ஒன்றுக்கு ரூ.297.50-ம், 600 யூனிட்டுகள் வரை மின் நுகர்வு செய்யும் 3.14 லட்சம் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு(1.32 சதவீதம்) ரூ.155-ம் மட்டுமே கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மின் கட்டண உயர்வு 2022 அட்டைவனை:

யூனிட்பழைய கட்டணம்புதிய கட்டணம்உயர்வு
200ரூ.170ரூ.225ரூ.55
300ரூ.530ரூ.675ரூ.145
400ரூ.830ரூ.1125ரூ.295
500ரூ.1130ரூ.1725ரூ.595
600ரூ.2446ரூ.2756ரூ.310
700ரூ.3110ரூ.3660ரூ.550
800ரூ.3760ரூ.4550ரூ.790
900ரூ.4420ரூ.5550ரூ.1130

மின்சார மானியம் தொடரும்:

குடிசை விவசாயம், கைத்தறி, விசைத்தறி மற்றும் வழிப்பாட்டு தலங்கள் முதலிய மின் கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்

தமிழகத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉News