மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 2023

Mettur Dam Water Level Today 2022

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று – Mettur Dam Water Level Today 2023

காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம், மேட்டூரில் மேட்டூர் அணை 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின்படி ரூ 4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இது தான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும். மேட்டூர் அணையின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 இலட்சம் ஏக்கர் நிலங்கள் நீர் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றிலிருந்து பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திற்கும்போது அணை மற்றும் சுரங்க மின் நிலையம் மூலம் 250 மெகாவாட் மற்றும் காவிரி ஆற்றில் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம் மொத்தம் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூர் அணை கட்டிமுடிக்கப்பட்டு 83 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முதலாக அணையின் நீர்பரப்பு பகுதியில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 28-05-2017 அன்று துவக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

சரி இந்த பதிவில் மேட்டூர் அணை இன்றைய நிலவரம் என்ன என்பதை பற்றி படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

Mettur Dam Water Level Today – மேட்டூர் அணை இன்றைய நிலவரம் – Mettur Anai Neer Mattam Today:

மேட்டூர் அணை நீர்மட்டம் முழு ஆழம் முழு கொள்ளளவு நடப்பு ஆண்டு நிலை தற்போதைய ஆண்டு சேமிப்பு நடப்பு ஆண்டு வரவு நடப்பு ஆண்டு வெளியேற்றம் கடந்த ஆண்டு நிலை கடந்த ஆண்டு சேமிப்பு
நேற்று (31.03.2023) 120 93470 102.87 68611 1410 1503 105.15 71676
இன்று (01.04.2023) 120 93470 102.87 68611 1410 1503 105.15 71676

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil