வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 3 தினங்களுக்கு மழை தொடரும்..!

Advertisement

Vaanilai Arikkai Tamil Nadu

கடந்த பல நாட்களாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ந்து வருகிறது. அந்த வகையில் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறிய வானிலை அறிக்கை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்..

வானிலை அறிக்கை:

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வழித்தெடுத்துள்ளதாம். இதன் காரணமாக இந்து காலை ஆழ்ந்த காற்றழுத்த பகுதிகளாக நிலவுகிறதாம். இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நாளை காலை வரை தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடுமாம். பின்பு தமிழகம் மற்றும் கேரள பகுதிகளை கடந்து அரபிக்கடல் பகுதிக்கு செல்லகூடுமாம்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெருபாலான இடங்களில் மழை பெய்ந்துள்ளது. குறிப்பாக 21 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளதாம்.

அந்த வகையில் அதிகபட்சமாக மயிலாடுதுறை கொள்ளிடத்தில் 11 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாம்.

அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய கூடும்.

கனமழை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு கடலூர் மற்றும் டெல்ட்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும்,

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெயக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டருக்கு இன்றும் நாளையும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது.

சென்னை வானிலை:

சென்னையை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ரெட் அலாட்:

தற்பொழுது டெல்டா மாவட்டங்களுக்கு மட்டும் ரெட் அலாட் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement