தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 21-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் எங்கு தெரியுமா?

Advertisement

ஏப்ரல் 21-ஆம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023

Employment Camp in Tamilnadu 2023 – எந்தவித கட்டணமும் இன்றி வருகின்றன ஏப்ரல் 21-ஆம் தேதி தமிழத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தமிழத்தில் எங்கு நடைபெற போகிறது, யாரெல்லாம் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டுமா? அப்படியென்றால் பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 2023 – Employment Camp in Tamilnadu 2023:

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தில் வருகின்ற ஏப்ரல் 21-ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு பற்றி கீழ் பார்க்கலாம்.

தனியார் துறை நிறுவனங்களின் பணிபுரிய விரும்புபவர்கள் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தை நேரடியாக சந்திக்கவும். தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் மாவட்டத்தில் மாதந்தோறும் மூன்றுவது வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு அறிவிப்பு விவரங்களை அறிய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 தற்போதைய அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2023

அந்த வகையில் இந்த மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளை கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்யலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள எந்தவிதமான கட்டணமும் மனுதாரகர்கள் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆக பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மட்டும் இந்த நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு அறிவிப்பை பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement