100 நாள் வேலை திட்டத்தில் சில அதிரடி மாற்றம் செய்த மத்திய அரசு..!

Advertisement

100 Days Work Details in Tamil

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் (மாற்று திறனாளிகள் உட்பட) காலை மற்றும் மதியம் தங்களின் வருகையினை தவறாமல் NMMS வாயிலாக பதிவு செய்தால் மட்டுமே தாங்கள் பணிக்கு வருகை தந்தது உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

100 நாள் வேலை திட்டம் 2023:100 Days Work

2005 ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 100 நாள் உடல் உழைப்பைக் கொண்ட வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ், 100 நாள் வேலை திட்டத்தை அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த சட்டம், ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது. 100 நாட்கள் வேலை தர அரசு (பஞ்சாயத்து அமைப்புகள்) தவறினால், பாதிக்கப்பட்டவருக்கு முதல் 30 நாட்களுக்கு சம்பளத்தில் கால் பங்கும், மேலும் தவறினால் பாதி ஊதியத்தை அபராதமாக அரசு தர வேண்டும்.

இவ்வாறு வேலை செய்பவர்களுக்கு NEFMS மென்பொருள் கொண்டு ஆதார் இணைப்பு மூலம் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

2022 மே மாதம் சில முக்கிய மாற்றங்களை மத்திய அரசு தெரிவித்தது. அதாவது 20-க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட பணித்தளங்களில் (Muster roll) கையால் எழுதப்படும் வருகைப்பதிவேடு நிறுத்தப்பட்டது. இந்த தளங்களில் உள்ள பணியாளர்கள் புவிசார் புகைப்படத்துடன் கூடிய NMMS செயலி மூலமே வருகைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜனவரி 1, 2023 20-க்கும் குறைவான பணியாளர்கள் பணி புரியும் பணித்தளங்களிலும் NMMS செயலி மூலம் மட்டுமே வருகைப் பதவி செய்ய வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, நீங்கள் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் பணி செய்து வந்தால், இந்த செயலி மூலம் காலை, மாலை என இரு வேலைகளிலும் வருகைப் பதிவு செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் HPV தடுப்பூசி

 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement