100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு…! அரசு எடுத்த அதிரடி முடிவினால் மகிழ்ச்சியில் மக்கள்..!

100 days work salary announcement in tamil nadu in tamil

100 நாள் வேலை திட்டம்

கிராம புறங்களில் உள்ள பெரும்பாலான வேலைகளில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேலை என்றால் அது 100 நாள் வேலை திட்டம் ஆகும். இத்தகைய திட்டம் மூலம் பெண்கள் மற்றும் ஆண்கள் என அனைவரும் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் இந்த வேலைக்கான நேரமும் குறைவாக தான் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தினை தான் 100 நாள் வேலை என்று மற்றொரு பெயரிலும் அழைக்கின்றனர். மத்திய அரசானது குறைவான நேரத்தில் அதிக சம்பளத்துடன் பயன்படக்கூடியதாக இந்த திட்டத்தினை மக்களுக்கு அளித்து வந்தது. இப்படி இருக்கும் பட்சத்தில் 100 நாள் வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு குறித்து மற்றொரு அறிவிப்பினையும் அமைச்சர் பெரியசாமி அவர்கள் அறிவித்துள்ளார். ஆகையால் அது என்ன அறிவிப்பு என்ற தகவலை இன்றைய பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

100 நாள் வேலை திட்டம் சம்பளம் 2023:

கிராம புறங்களில் பெரும்பாலும் ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறிப்பிட்ட கால அளவில் 100 நாள் வேலை திட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தகைய வேலையினை சரியாக கவனிப்பதற்காக ஆள் நியமனம் செய்யப்பட்டும் கண்காணித்தும் வருகிறது.

2006 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நபருக்காக அவருடைய பெயரில் அட்டை ஒன்று கொடுக்கப்பட்டு அதில் பதவி செய்யப்பட்டும் வருகிறது.

இதையும் படியுங்கள்⇒ ஏப்ரல் 1 முதல் இதற்கு எல்லாம் கட்டணம் உயர்த்தப்படுமாம்..  உங்களுக்கு இன்னும் தெரியாதா..

இவ்வாறு கிராம புறங்களில் நடைபெற்று கொண்டிருக்கும் 100 நாள் வேலை திட்டத்திற்கான சம்பள உயர்வு குறித்து அமைச்சர் பெரியசாமி அவர்கள் சட்டப்பேரவையில் ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளார்.

அது என்னவென்றால் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஒரு நாள் சம்பளம் 294 ரூபாயாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக சுமார் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதோடு மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் 2,500 ஊராட்சிகளில் காணப்படும் பள்ளிகளை புதிதாக சீரமைக்க போவதாகவும், அனைத்து அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளதாகவும் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ பான், ஆதாரை இணைக்காதவர்களுக்கு அரசு அறிவித்த அதிரடியான மற்றொரு அறிவிப்பு என்ன தெரியுமா.. தெரிலைனா உடனே இதை தெரிஞ்சுக்கோங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil