சாதாரண பட்டன் போன் மூலமும் இனி பண பரிவர்த்தனை ஈஸியா செய்யலாம்..!

Advertisement

யுபிஐ 123 பட்டன் போன் பணப்பரிமாற்றம் | 123 Pay UPI Transaction Method in Tamil

பண பரிமாற்றம் செய்வதற்கு முன்னெல்லாம் இன்டர்நெட் வசதி இருந்தால் தான் செய்ய முடியும். ஆனால் இப்போது ரிசர்வ் வங்கி எந்த ஒரு இன்டர்நெட் வசதியும் இல்லாமல் ஈசியாக பட்டன் போனில் பண பரிவர்த்தனை செய்வதற்கு புதிய அறிமுகத்தை அதாவது “123 பே” என்று பெயரிட்டுள்ளது. இந்த முறை மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் நபர்களுக்கு மிகவும் இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். எனவே சாதாரண பட்டன் போன் உபயோகிக்கும் 40 கோடி நபர்களால் இனி பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

Android Tricks செல் போனில் பேசும் போதே நம்பரை சேவ் செய்வது எப்படி?

RBI அறிவித்த யுபிஐ ஸ்மார்ட் அறிவிப்பு:

ஸ்மார்ட் போனில் மட்டுமே பண பரிவர்த்தனை செய்து வந்தார்கள். தற்போது யு.பி.ஐ (UPI) என அழைக்கப்படும் யுனைட்டெட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் உதவியுடன் ஸ்மார்ட் போன்கள் மூலம் பனம் செலுத்தும் முறை இப்போது ட்ரெண்டிங்கில் போய்க்கொண்டு இருக்கிறது. இந்த UPI வசதிக்கு 123 பே என்று பெயர் வைத்துள்ளார்கள்.

பண பரிவர்த்தனை எப்படி செய்ய வேண்டும்?

முதலில் சாதாரண பட்டன் மொபைல் வைத்திருப்பவர்கள் மொபைல் எண்ணுடன் வங்கி கணக்கினை இணைக்க வேண்டும். அதன் பிறகு டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ Password கிரியேட் செய்துக்கொள்ளவும். அதன் பிறகு பட்டன் மொபைலில் பணம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம்.

முக்கியமாக பணத்தை பணம் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரது மொபைல் எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். பின்னர் அனுப்ப வேண்டிய பணத்தை உள்ளீடு செய்து பாஸ்வேர்டு போட்டால் பணம் பரிவர்த்தனை ஆகிவிடும் என்று இந்த புதிய அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் சிறப்பு:

எந்த ஒரு செயலையும் இப்போது நெட் வசதி இல்லாமல் செய்ய முடியவில்லை. இதனுடைய சிறப்பே சாதாரண பட்டன் செட் மொபைலில் இன்டர்நெட் வசதி தேவையே இல்லை. பண பரிவர்த்தனை மட்டுமல்லாமல் கேஸ் பில், ரீசார்ஜ் பில் போன்றவைகளை செய்துக்கொள்ளலாம்.

தங்களுடைய வங்கி கணக்கில் உள்ள சேமிப்பு தொகையினையும் இதில் சரிபார்த்து கொள்ளலாம்.

ஸ்மார்ட்போன் ஸ்கேன் அண்ட் பே செய்யப்படும் இடங்களிலும் கூட இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்துக்கொள்ளலாம்.

இனி ஸ்மார்ட்போனில் போன் சார்ஜையும் பகிரலாம்..!

பயனாளர்கள்:

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பட்டன் மொபைலில் கூட பண பரிவர்த்தனையை செய்வதற்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் பீச்சர் போன் எனும் கீபேட் கொண்ட பேசிக் மாடல் போன்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

இந்த நிலையில் கீபேட் போன் பயன்படுத்தும் மக்களுக்கு UPI பயன்பாட்டை உபயோகிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி உள்ளது, ரிசர்வ் வங்கி.

123 பே யுபிஐ வசதி மூலம் இந்திய நாட்டில் கீபேட் போன் பயன்படுத்தும் 40 கோடி பயனாளர்களால் ஈஸியாக பண பரிமாற்றம் செய்துகொள்ள முடியும்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement