12th Public Exam எழுதி இருக்கீங்களா..! அப்போ உங்களுக்கான Result தேதி இது தான் தெரிஞ்சுக்கோங்க..!

Advertisement

12th Public Exam Result Date 2023 Tamil Nadu

பொதுவாக நாம் கற்கும் கல்வி ஆனது ஒரு மாணவரின் அறிவினையும், பழக்க வழக்கங்களையும் மற்றும் செயல் திறனையும் சிறப்பாக மாற்றுக்கூடிய ஒன்றாக உள்ளது. இத்தகைய கல்வி முறையில் 10th, 11th மற்றும் 12th ஆகிய வகுப்புகள் ஆனது மிகவும் முக்கியமான வகுப்புகளாக உள்ளது. ஏனென்றால் இந்த மூன்று வகுப்புகளில் தான் பொதுத்தேர்வு ஆனது நடைபெறுகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்த தேர்வு ஆரம்பம் ஆவது முதல் முடியும் வரை பலத்த பாதுகாப்புடனும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பார்த்தோம் என்றால் இந்த வருடத்திற்கான பொதுத்தேர்வு முடிவடைந்து மாணவர்கள் அனைவருக்கும் கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த படியாக மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறார்கள். உங்களுடைய இத்தகைய ஆர்வத்திற்கான ஒரு நற்செய்தியாக 12-ஆம் வகுப்பு எழுதியுள்ள மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே அது எந்த தேதி மற்றும் எந்த மாதம் போன்ற தகவலினை தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள்:

தமிழ்நாட்டை பொறுத்தவரை 2023-ஆம் ஆண்டிற்கான பொதுதேர்வானது மார்ச் மாதம் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3-ஆம் தேதி முடிவடைந்து விட்டது. இத்தகைய பொதுதேர்வில் தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக சுமார் 8 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

+2 பொதுத்தேர்வு சிறப்பான முறையில் நடந்து முடிந்த நிலையில் இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது என்று ஒரு அறிவிப்பு வந்துள்ளது.

 ஆனால் இத்தகைய அறிவிப்பு தேதியில் ஒரு சிறிய மாற்றம் வந்துள்ளது. அதாவது 2023-ஆம் ஆண்டிற்கான +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் 8-ஆம் தேதி திங்கள் கிழமை அன்று வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மேலும் மே மாதம் 7-ஆம் தேதி நீட் தேர்வுகள் நடைபெற இருப்பதனால் தான் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது என்றும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்👇👇 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுமாம்.. எந்தந்த வகுப்புகளுக்கு தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement