பிளஸ்டூ தேர்ச்சி விகிதம்: உங்கள் மாவட்டம் எத்தனையாவது? – 12th Result HSC Result District Wise Pass Percentage
12-ம் வகுப்பு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பள்ளி தேர்ச்சி விகித அடிப்படையில் முதல் இடத்தில விருதுநகர் மாவட்டம் உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள் எத்தனையாவது இடத்தில் உள்ளது என்பதை விரிவாக இந்த பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
கடந்த மார்ச் மாதம் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்தது. இந்த தேர்வினை 8 லட்சத்து 17 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினர், இந்த தேர்வு முடிவுகள் நேற்று முடிவானது. பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு தங்களது மதிப்பெண்களை மாணவ மாணவிகள் தேர்ந்துகொண்டனர். 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியவர்களில் 94.03% பேர் தேர்ச்சியெனவும், அதில் மாணவிகள் 96.03% பெரும், மாணவர்கள் 91.45% பெரும் தேர்ச்சி என பள்ளி கல்வி துறையமைச்சர் அம்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
இதில் மாவட்டம் வாரியாக பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் அடிப்படையில் எந்த மாவட்டம் முதலிடம்.?, எந்த மாவட்டம் கடைசி இடம்.? உள்ளது என்பது குறித்து கீழ் உள்ள அட்டவணையில் நாம் பார்த்து தெரிந்துகொள்வோம் வாங்க.
மாவட்டம் வாரியாக 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு சதவிகிதம்:
| 1 விருதுநகர் | 97.85 |
| 2 திருப்பூர் | 97.79 |
| 3 பெரம்பலூர் | 97.59 |
| 4 கோவை | 97.57 |
| 5 தூத்துக்குடி | 97.36 |
| 6 சிவகங்கை | 97.26 |
| 7 கன்னியாகுமரி | 97.05 |
| 8 ஈரோடு | 96.98 |
| 9 நாமக்கல் | 96.94 |
| 10 அரியலூர் | 96.88 |
| 11 திருநெல்வேலி | 96.61 |
| 12 ராமநாதபுரம் | 96.3 |
| 13 திருச்சி | 96.02 |
| 14 தென்காசி | 95.96 |
| 15 மதுரை | 95.84 |
| 16 தஞ்சாவூர் | 95.18 |
| 17 கரூர் | 94.31 |
| 18 சேலம் | 94.22 |
| 19 சென்னை | 94.14 |
| 20 நீலகிரி | 93.85 |
| 21 திண்டுக்கல் | 93.77 |
| 22 புதுச்சேரி | 93.45 |
| 23 தேனி | 93.17 |
| 24 புதுக்கோட்டை | 92.81 |
| 25 தருமபுரி | 92.72 |
| 26 செங்கல்பட்டு | 92.52 |
| 27 திருவள்ளூர் | 91.46 |
| 28 கடலூர் | 92.04 |
| 29 திருவாரூர் | 91.46 |
| 30 திருப்பத்தூர் | 91.13 |
| 31 கள்ளக்குறிச்சி | 91.06 |
| 32 காஞ்சிபுரம் | 90.82 |
| 33 நாகப்பட்டினம் | 90.68 |
| 34 விழுப்புரம் | 90.66 |
| 35 மயிலாடுதுறை | 90.15 |
| 36 திருவண்ணாமலை | 89.8 |
| 37 கிருஷ்ணகிரி | 89.69 |
| 38 வேலூர் | 89.2 |
| 39 காரைக்கால் | 88.57 |
| 40 ராணிப்பேட்டை | 87.3 |
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பிளஸ்டூ தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண் வாங்கிய கூலி தொழிலாளியின் மகள்..!
அரசு பள்ளியில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் உள்ளது. திருப்பூரில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 96.45 சதவீதமாக உள்ளது.
பள்ளிகள் வாரியாக பெண்கள் பள்ளிகள் தேர்ச்சி விகிதம் 96.05 சதவீதமாக உள்ளது.
இருபாலர் பள்ளிகளானது 94.39 சதவீத தேர்ச்சி எனவும். ஆண்கள் பள்ளிகள் 87.79 சதவீதம் தேர்ச்சி எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு பள்ளி தேர்ச்சி விகிதமானது 89.08 சதவீதம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
| மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |














