24 Hour Three Phase Electricity To The Farmers in Tamil
வாசகர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் விவசாயிகள் அனைவருக்கும் ஒரு நற்செய்தியை கூறப்போகிறேன். அப்படி என்ன செய்தி என்று யோசித்து கொண்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்கள்..! பொதுவாக நாம் அனைவருமே அன்றாடம் உணவு உண்பதற்கு விவசாயிகள் தான் காரணம். விவசாயிகள் இல்லையென்றால் நமக்கு உணவு என்பதே கிடைக்காது.
ஆனால் நாம் இன்று விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள் கட்டி கொண்டிருக்கின்றோம். இதனால் நமக்கு எதிர்காலத்தில் உணவுக்கு கூட பற்றாக்குறை ஏற்பட்டு விடும். அதனால் நாம் தான் விவசாயத்தை காக்க வேண்டும். சரி வாங்க நண்பர்களே விவசாயிகளுக்கு கூறும் நற்செய்தி என்ன என்று பார்ப்போம்.
இனி அனைவரின் வீடுகளிலும் QR Code சேவைகளை பெறும் வசதி |
விவசாயிகளுக்கு ஒரு குட் நியூஸ்..!
பொதுவாக விவசாயிகளுக்கு இதுவரை 18 மணி நேரமும் மும்முனை மின்சார வசதி வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் இனி 24 மணி நேரமும் மும்முனை மின்சார வசதி வழங்கப்பட வேண்டும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் 11 வது நாள் கூட்டம் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் சிவகங்கை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன், விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 18 மணி நேர மும்முனை மின்சாரத்தை 24 மணி நேர மும்முனை மின்சாரமாக மாற்றி வழங்க வேண்டும் என்று கூறினார்.
ஏப்ரல் மாதம் அமலுக்கு வந்த புதிய திட்டங்கள் இதை கூட தெரிஞ்சிக்கலனா எப்படி |
அதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினரான செந்தில்நாதன் கேள்விக்கு பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
இந்த வசதி விரைவில் வருவதாகவும், இதனால் விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன சொல்றீங்க..! இனி இந்த ஆப்களில் UPI மூலம் பணம் அனுப்பினால் கட்டணம் கிடையாதா |
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |