பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படுமாம்..! எந்தந்த வகுப்புகளுக்கு தெரியுமா..?

Advertisement

10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2023

ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. கல்வி என்பது வெறும் அறிவினை மற்றும் கற்று கொடுக்காமல் நல்ல பழக்க வழக்கம் முதல் மற்றவரிடம் பேசும் வார்த்தைகள் வரை என நிறையவற்றை கற்று கொடுக்கிறது. அந்த வகையில் ஒரு குழந்தை படிக்கும் பள்ளி படிப்புகளில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பானது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அதற்கு ஏற்றவாறு பிரிவினை தேர்வு 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் படிக்க முடியும். அந்த வகையில் தொடர்ச்சியாக 3 வருடம் பொதுத்தேர்வு எழுத வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த வருடத்திற்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்து விட்டது. இப்படி இருக்கையில் கல்வி துறை ஆனது போனஸ் மதிப்பெண்கள் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்க கோரி ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளது. ஆகையால் அந்த அறிவிப்பு என்ன எந்த வகுப்பிகளுக்கு போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும் போன்ற தகவல் அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போனஸ் மதிப்பெண்:

இந்த வருடத்திற்கான 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் பொதுத்தேர்வு முடிவிற்காக காத்து கொண்டிருக்கின்றார்கள்.

பொதுத்தேர்வு எழுதிய வினாத்தாள்களை திருத்தும் பணியும் வெகு விமர்சனமாக நடந்து கொண்டிருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. இவ்வாறு இருக்கையில் தேர்வு துறை இயக்குனர் ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது.

அது என்னவென்றால் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 5 மதிப்பெண்கள் போனஸ் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

 அதாவது 10-ஆம் வகுப்பு ஆங்கிலம் பொதுத்தேர்வு வினாத்தாள்- 2 இல் கேட்கப்பட்டுள்ள 4,5 மற்றும் 6 ஆகிய 1 மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளித்தாலும் அல்லது அளிக்கவில்லை என்றாலும் மொத்தம் மூன்று மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

மேலும் 28-வது கேள்வியாக கேட்கப்படும் 2-மதிப்பெண் கேள்விக்கு பதில் அளித்தலும் அல்லது அளிக்கவில்லை என்றாலும் 2 மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்றும், மொத்தமாக தவறுதலாக கேட்கப்பட்ட 4 கேள்விகளுக்கும் சேர்த்து 5 மதிப்பெண்கள் போனஸ் மதிப்பெண்ணாக வழங்கப்படும் என்றும் தேர்வு துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு.1 கோடி நபர்கள் தேர்வு..! யார் தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement