8th Pay Commission News
இன்றைய பதிவின் மூலம் Pothunalam.com வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை தெரிவிப்பது மகிழ்ச்சி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கேள்விகளுக்கும், புதிய செய்திகளும் உங்களுக்கு தெரிவித்து வருகிறோம் அல்லவா..? அதேபோல் இதனை தொடர்ந்து இன்று மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு பற்றிய செய்திகளை பற்றி பார்க்க போகிறோம்..!
பொதுவாக அரசு வேலை என்றால் அனைவருக்கும் ஆசையாக இருக்கும். அந்த வேலைகளுக்கு செல்வது என்றால் அது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. தற்போது 7th Pay Commission ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தியதை பற்றிய செய்திகள் வெளிவந்துள்ளது. அதனை பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளவும்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
8th Pay Commission News in Tamil:
பொதுவாக அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க வேண்டும் என்பதற்காக அகவிலைப்படி மற்றும் ஊதிய உயர்வினை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்து வருகின்றது.
அதுபோல கடந்த நவம்பர் மாதம் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 7 -வது சம்பள குழு கமிஷன் மூலம் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
8வது ஊதியக் குழு: தேசிய ஓய்வூதிய முறையை மேம்படுத்த நிதிச் செயலர் தலைமையில் நான்கு பேர் கொண்ட குழுவை மோடி அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து 8 வது ஊதியக் குழு அமைக்கலாம் என்று மோடி அரசு தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு 8 வைத்து ஊதிய குழு அமைக்கபடும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதற்கு முன் 7 குழு ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016 இல் அமல்படுத்தப்பட்டபோது, அதற்கு பிந்தைய குழுவின் பரிந்துரைகளை 2013 இல் தான் அமைக்கப்பட்டது. இந்த புதிய குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு பிறகும் அமுலுக்கு வரும் வாய்ப்பு உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2022 -ல், எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கு மோடி அரசு ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வி நிதி அமைச்சரிடம் கேட்கப்பட்டது. சம்பள கமிஷன் 2023 -ல் அமைக்கப்பட வேண்டி இருந்தது. இந்த கேள்விகளுக்கு பதிலளித்த ஊதிய குழு அமைச்சர் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி 8 குழு அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என தெரிவித்தார்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் குறித்து மோடி அரசுக்கு எந்த குழப்பமும் இல்லை. ஆகையால் மக்களவையில் நிதி மசோதா நிறைவேற்றப்பட்டபோது அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அதேபோல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், இதுபோன்ற சூழ்நிலையில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், 8வது ஊதியக் குழு அமைப்பதற்கும் மோடி அரசு சம்மதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |