சும்மா இருப்பதே சுகம்
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் ஒரு இளைஞர் முழுநேரமாக சும்மா இருந்து சம்பாரித்து வருகிறான். இதை செய்து மக்களிடையே அதிகளவில் கவரப்பட்ட யார் இந்த மனிதன்? சும்மா இருந்தால் எப்படி சம்பளம் கிடைக்கிறது என்று யோசித்துவருகிறார்கள். அதுவும் இந்தியாவில் அந்த மனிதன் வாங்கும் சம்பளம் 5,600 ரூபாய் ஆகும். இது போல் இருந்தால் நாமும் அதை செய்யலாம் என்று அதிகளவு இதனை பற்றி பேசி வருகிறார்கள். வாங்க அவர் யார் அந்த இளைஞர் ஏன் இதை செய்கிறார் என்று தெரிந்துகொள்வோம்..!
சும்மா இருப்பதே சுகம்:
சும்மா இருப்பது எவ்வளவு கடினமான ஒன்று தெரியுமா என்ற வார்த்தையை சொல்லி திரைப்படத்தில் வடிவேல் அவர்கள் சொல்வதை ஜப்பானில் ஒரு இளைஞர் அவருடைய வார்த்தையை காப்பாற்றிவிட்டார்..!
அது மட்டும்மில்லாமல் அவர் 1000 கணக்கில் சம்பாதிக்கிறார் தெரியுமா. யார் அந்த உன்னதமான மனிதன் தெரியுமா இவருடைய பெயர் ஷோஜி மொரிமோட்டோ ஆகும். இவர் ஜப்பான் நாட்டில் தலைநகர் பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சும்மா இருப்பதை முழுநேர தொழில் ஆகும். இவர் ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பாதிக்கிறார். அது இந்தியா ரூபாயில் 5,600 ரூபாய் ஆகும்.
இவர் பார்ப்பதற்க்கு ஒல்லியாகவும். நடுத்தரமான உடலமைப்பில் இருப்பார். இவருக்கு என்ன தொழில் என்றால் வயதானோருக்கு துணைக்கு செல்வது, நண்பர்கள் இல்லாதவர்களுக்கு நண்பனாக செல்வது. அதேபோல் ஊரை சுற்றிபார்க்க வருவோருக்கு மகிழ்ச்சியாக கம்பெனி கொடுப்பாராம்.
இந்த பணிக்காக அதிகம் பேர் அவரை தேடி வருகிறாராம். இதுவரை 4000 பேர்களுடன் சும்மா சென்று வந்துள்ளாராம். ஆனால் எப்போதும் பாலியல் இறுதியாக எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை என்று ஷோஜி மொரிமோட்டோ தெரிவித்துள்ளார்.
ஷோஜி மொரிமோட்டோ கூறுகையில் நான் என்னையே வாடகைக்கு விடுகிறேன் என்று சொல்கிறார். என்னுடைய உதவி தேடி வருகிறவர்கள் எங்கு செல்ல வேண்டுமோ அவர்களுடன் சென்று வருகிறேன் நான் எந்த வேலையும் செய்வதில்லை அவர்களுடன் துணைக்கு சென்று வந்தால் போதும் எனக்கு சம்பளம் கிடைத்துவிடும்.
இவரை சமூக வலைத்தளங்களில் அதிகளவு பின் தொடர்கிறார்கள். அதனால் இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறார். அதேபோல் ட்விட்டர் பக்கத்தில் இவரை வேலைக்கு அழைத்து வருகிறாராம்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து அவருடைய மனைவி குழந்தைகளை பார்த்துக்கொள்கிறாராம். சும்மா இருந்தாலும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக நான் இருக்கிறேன் என்று சொல்கிறார். அதனால் மக்கள் அதிகளவு என்னை அணுகி வருகிறார்.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |