ஆதார் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த குட் நியூஸ் இன்னும் தெரியாத..?என்னா சொல்றீங்க..!

Advertisement

ஆதார் கார்டு

இன்றைய காலத்தை பொறுத்தவரை இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் நாம் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு முதலில் கேட்பது ஆதார் கார்டினை மட்டும் தான். அத்தகைய ஆதார் கார்டில் ஏதாவது ஒரு பிழை இருந்தாலும் கூட அதனை உடனே நாம் சரி செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஏனென்றால் ஆதார் கார்டில் பிழைகள் எதுவும் இருக்கும் பட்சத்தில் அதனை சில இடத்தில் ஆதாரமாக ஏற்று கொள்ள மாட்டார்கள். அதுபோல ஆதார் கார்டு மட்டும் இல்லாம் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை இத்தகைய ஆவணங்களில் ஏதாவது பிழை இருந்தாலும் அதனை சரி செய்வதற்காக முயற்சியினை மேற்கொள்வோம். ஆனால் இனி நீங்கள் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை இந்த ஆவணங்களில் ஏதாவது பிழை இருந்தால் அதனை திருத்துவதற்கு அழைய வேண்டாம். ஏனென்றால் அதற்கான குட் நியூஸை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ரேஷன் கார்டு வைத்து இருக்கும் அனைவருக்கும் இந்த நியூஸ் தெரியுமா..? தெரிலான உடனே தெரிஞ்சுக்கோங்க..!

இந்திய தனித்துவ அடையாளம்:

இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை மற்றும் பான் கார்டு போன்றவை மிகவும் முக்கியமான ஒரு ஆவணமாக உள்ளது.

இத்தகைய ஆவணங்களில் ஏதாவது ஒரு பிழை திருத்தும் என்றால் அதனை சரி செய்யும் பட்சத்தில் மட்டுமே நமக்கான சலுகைகளை பெற முடியும். ஆனால் அத்தகைய பிழைகளை சரி செய்வது மிகவும் சாத்தியமற்ற செயல்.

ஏனென்றால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆவணங்களில் பிழை இருந்தால் அதனை திருத்துவதற்கு ஒவ்வொரு முறையும் தனித்தனியாக அழைய வேண்டியது இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அனைத்து விவரங்களும் ஒரே மாதிரி இருப்பது இல்லை.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசு மக்கள் அனைவரும் பயன் அடையும் விதத்தில் ஒரு அறிவிப்பை அறிவித்துள்ளது.

அப்படி மத்திய அரசு அறிவித்துள்ள அறிவிப்பு என்னவென்றால்..? எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் வாக்காளர் அட்டை இவற்றில் ஏதேனும் பிழைகள் இருந்தால் தனித்தனியாக மாற்றாமல் ஆதார் கார்டில் மட்டும் மாற்றினால் மற்ற ஆவணங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும் மாறும் புதிய முறையினை வடிவமைத்து வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக அந்தந்த துறையில் இதனை பற்றிய விவரங்களை கூறி அதற்கான முயற்சியினை மேற்கொள்வதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்⇒ இனிமேல் சென்னை மக்கள் யாரும் பஸ்சிற்காக காத்திருக்க வேண்டாம்..! குட் நியூஸ் வந்தாச்சு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement