ஆதார் மற்றும் பான் கார்டு
இன்றைய காலத்தை பொறுத்தவரை நூற்றில் 75% மக்கள் பான் மற்றும் ஆதார் கார்டு வைத்து இருக்கிறார்கள். அதுபோல இத்தகைய கார்டு ஆனது மக்களின் இன்றையமையாத ஒரு அடையாளமாக உள்ளது. ஒரு நபரின் வருமான வரி முதல் வருடாந்திர வருமானம் முதலியவற்றை கணக்கிடுவதற்கும் இத்தகைய ஆவணம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசானது ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பினை கட்டாயமாக்கி உள்ளது. ஆனால் அதற்கான காலக்கெடுவு முடிவடைவதற்குள் பணிகள் முடிவடையாததால் மேலும் சில நாட்கள் அதற்கான காலக்கெடுவினை மத்திய அரசு நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் இப்போது மத்திய அரசானது மக்கள் பயன்பெறும் வகையில் இந்த நவீனக்கால தொழிநுட்பத்தினை அடிப்டையாக வைத்து ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அதனால் அது என்ன அறிவிப்பு மற்றும் அதன் மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம் போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
மத்திய அரசு அறிவித்துள்ளது:
பொதுவாக நாம் அனைவருக்கும் எப்படி ஆதார் அட்டை, பான் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அட்டை இவற்றை எல்லாம் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறதோ. அதனை போலவே ஓட்டுநர் உரிமம் முக்கியமான ஒன்று தான்.
இத்தகைய ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் நம்மால் வாகனத்தில் அனைத்து இடங்களுக்கு எல்லாம் செல்வது என்பது கொஞ்சம் கடினம் தான். அதனால் நாம் எங்கு வாகனத்தை ஒட்டிக்கொண்டு சென்றாலும் கண்டிப்பாக ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
அதனால் நாம் எங்கு சென்றாலும் ஓட்டுநர் உரிமைத்தை கையிலேயே எடுத்த செல்ல வேண்டிய நிலை இருக்கும். ஆனால் இனிமேல் இப்படி இருக்க வேண்டாம். ஏனென்றால் இவற்றிற்கு மத்திய அரசு ஒரு புதிய அறிவிப்பினை வாகன ஓட்டிகள் மற்றும் சாதாரண மக்களுக்கு அறிவித்துள்ளது.
அது என்ன அறிவிப்பு என்றால் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றையினை எங்கு சென்றாலும் இனி கையில் எடுத்துகொள்ள வேண்டாம். இதற்கு மாறாக மொபைல் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளது.மேலும் படிக்க
மேலும் மேலே கூறப்பட்டுள்ள முக்கியமான ஆவணங்களை மொபைல் மூலம் பதிவிறக்கம் செய்வதற்கு உங்களுடைய மொபைலில் டிஜிட்டல் லாக்கர் Account இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நீங்கள் புதிதாக டிஜிட்டல் லாக்கர் என்ற ஆப்பினை Download செய்து பின்பு அதில் மத்திய அரசின் MyGov Helpdesk என்பதனை உபயோகப்படுத்தி வாட்சப் மூலம் உங்களுடைய பான், ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இத்தகைய முறையின் மூலம் மக்கள் அனைவருடைய ஒர்ஜினல் ஆவணங்கள் தொலைந்து போகாது என்பதால் இது எளிய முறையாக இருக்கிறது.
இதையும் படியுங்கள்⇒ குடும்ப அட்டை வைத்து இருப்போருக்கு தமிழக அரசு அறிவித்த குட் நியூஸ்… இன்னும் இதை நீங்க தெரிஞ்சுக்கலையா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |