ஆதார் மற்றும் பான் கார்டு இணைப்பு
இந்திய குடியுரிமை பெற்ற அனைவருக்கும் பான் கார்டு ஆனது முக்கியமான ஒரு கார்டாக உள்ளது. அதனால் இந்த கார்டினை பெரும்பாலான மக்கள் உபயோகப்படுத்தி வருகின்றனர். பான் கார்டு எப்படி மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறதோ அதனை போலவே ஆதார் கார்டும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இத்தகைய பான் கார்டை வைத்து ஒரு நபரின் அனைத்து விதமான வருமான வரியும் கணக்கிடப்படுகிறது. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு மத்திய அரசானது பான் கார்டை ஆதார் கார்டுடன் வரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அப்படி இணைக்காவிட்டால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பான் கார்டு செயலிழக்கப்படும் என்ற அறிவிப்பினையும் அறிவித்துள்ளது. இதனால் பான் கார்டு வைத்து இருக்கும் ஒவ்வொரு நபரும் விரைவாக இணைக்க தொடங்கினர். இதில் இதுநாள் வரையிலும் இணைக்காத பான் மற்றும் ஆதார் கார்டும் உள்ளது. ஆகையால் பான் மற்றும் ஆதார் கார்டினை இணைக்காத நபர்களுக்கு மத்திய அரசு ஒரு குட் நியூஸினை அறிவித்துள்ளது. ஆகையால் அது என்ன குட் நியூஸ் என்று விரிவாக பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.
இதையும் படியுங்கள்⇒ ரேஷன் அட்டை வைத்து இருப்பர்வர்கள் அனைவரும் இதை கட்டாயமாக தெரிந்துக்கொள்ளுங்கள்…
ஆதார் பான் கார்டு இணைப்பு கடைசி நாள்:
ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நாள் முதல் அதற்கான பணியில் பான் கார்டு வைத்து இருக்கும் ஒவ்வொரு நபரும் செய்து வந்தனர்.
அப்படி இணைக்கவில்லை என்றால் பான் கார்டு பிளாக் செய்யப்படும் என்ற அறிவிப்பின் மூலம் அனைவரும் மார்ச் 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து பான் கார்டு மற்றும் ஆதார் கார்டினை சில நபர்கள் மட்டும் இணைக்க வேண்டாம் என்ற மற்றொரு அறிவிப்பினையும் மத்திய அரசு அறிவித்து அதில் சில அடிப்படை விதிமுறைகளுடன் கூறியுள்ளது.
இப்படி இருக்கும் பட்சத்தில் இந்த அறிவிப்பு முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்கள் மட்டும் உள்ளது. ஆனாலும் கூட இன்னும் ஒரு சில நபர்கள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்கவில்லை.
ஆதார் மற்றும் பான் கார்டினை இணைக்காத நபர்களுக்கு மத்திய அரசானது இப்போது ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அது என்னவென்றால் பான் மற்றும் ஆதார் கார்டினை இணைப்பதற்கான தேதியினை நீடித்துள்ளது.
ஆகையால் வரும் ஜூன் மாதம் 30-ஆம் தேதிக்குள் இன்னும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காத நபர்கள் இணைத்து இருக்க வேண்டும் என்றும் புதிய அறிவிப்பினை அறிவித்து மக்களுக்கு ஒரு குட் நியூஸை தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்⇒ இந்த நபர்கள் எல்லாம் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டாமாம் தெரியுமா..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |