புதிய விதிமுறை..? ஆதார் அட்டையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றுவது அவசியம்..!

aadhaar update after 10 years in tamil

ஆதார் அட்டை சரிபார்த்தல்

முகம் தெரியாத அன்பு தோழன் தோழிகளுக்கு வணக்கம்.! இன்றைய பதிவில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆதார் கார்டு எதற்கு தேவை அதனை ஏன் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பது. ஆனால் அதனை பத்திரமாக வைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அதில் உள்ள அனைத்தும் சரியாக உள்ளது என்பதை சரி பார்க்கும் கடமையும் நமக்கு உள்ளது,

இப்போது அரசு அறிவித்துள்ள தகவல் என்னவென்றால் ஆதார் அட்டையை இத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது தான். வாங்க அதனை பற்றி தெளிவாக செய்திகளை இங்கு பார்ப்போம்..!

ஆதார் அட்டை புதுப்பித்தல்:

சிலர் மனதில் தோன்றும் நம் கடந்த 30 வருடமாக ஒரே இடத்தில் ஒரே முகவரியில் தான் இருக்கிறேன் நாம் எதற்கு புதுப்பிக்க  வேண்டும் என்று. அதுவும் சரி தான் ஆனால் இங்கு முக்கியமாக பார்க்கிறது என்னவென்றால் இந்திய மக்கள் அனைவருமே ஒரே இடத்திலும் ஒரே முகவரியில் இருப்பதில்லை என்பது தான் உண்மை.

ஆகையால் ஆதார் பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகள் முடிந்தபட்சத்தில் அந்த ஆதார் அட்டையை புதிப்பித்துக்கொள்ள வேண்டும்.

அந்த ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா இல்லை அதற்கு பெயர் மாற்றம் இருந்தால் அதனை சரி செய்ய வேண்டும். அதேபோல் உங்களின் விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொண்டு அதனை புதுப்பிக்க வேண்டும்.

இதையும்விடுங்கள் 👉👉 ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையில் MOBILE எண் மாற்றம் செய்வது எப்படி..?

இதற்கு நீங்கள் ஆதார் பெறுவதற்கு என்ன ஆதாரம் கொடுத்தீர்களோ அதாவது இருப்பிட சான்று, அடையாள அட்டை போன்றவற்றை கொடுத்து உங்களின் ஆதார் அட்டையை புதுப்பித்துகொள்ள வேண்டும் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த ஆதார் அட்டை உள்ளவர்கள் புதுப்பித்துக்கொள்ள அடையாளம் மற்றும் முகவரி ஆவணங்களை இணையவழியில் (ஆன்லைன்) புதுப்பிப்பதற்கான வசதியை யுஐடிஏஐ ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆன்லைன் வசதிகள் வலைதளப் பக்கம் மற்றும் செயலி மூலம் இணையவழியில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். ஆதாா் பதிவு மையங்களுக்கு நேரடியாகச் சென்றும் விவரங்களைப் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை நம் நாட்டில் 134 கோடி ஆதாா் அட்டைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவருமே புதிப்பித்துக்கொள்ள வேண்டும்.

இதையும் தெரிந்துகொள்ளவேண்டும் 👉👉 ஆதார் கார்டு பற்றி கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉News in Tamil