ஆதார் கார்டு வச்சு இருக்கவங்க டிசம்பர் மாசத்துக்குள்ள இதை செஞ்சுடனுமாம்..! வெளியானது புது நியூஸ்..!

Advertisement

Aadhar card Update Last Date 2023 Extended Date  

ஆதார் கார்டு என்பது 12 எண்களை கொண்டுள்ள ஒருவரின் தனிப்பட்ட அடையாள அட்டை ஆகும். அந்த வகையில் இதற்கு முன்பாக நாம் அனைவரிடமும் ரேஷன் அட்டை என்பது இருந்தாலும் கூட அது நமது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் சேர்த்து உள்ளதாக இருந்தது. ஆனால் இதனுடன் ஒப்பிடும் போதும் ஆதார் என்பது ஒரு குடும்பத்தில் 10 நபர்கள் இருந்தாலும் கூட தனித்தனியாக இருப்பது ஆகும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒருவரின் ஆதார் கார்டு அவருடைய வங்கி கணக்கு, பான் கார்டு என அனைத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு தனித்தன்மையினை கொண்டிருக்கும் ஆதார் கார்டினை வைத்து இருப்பவர்களுக்கு ஒரு புதிய அப்டேட் நியூஸ் வெளி வந்துள்ளது. ஆகையால் அது என்ன நியூஸ் என்று பதிவை தொடர்ந்து படிக்கலாம் வாங்க…!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆதார் கார்டு புதுப்பித்தல்:

ஒவ்வொருவரின் ஆதார் கார்டு என்பது மிகவும் முக்கியமானதாக இருப்பதனால் இதனை நாம் சரியான முறையில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்த்தால் நம்மில் பலருடைய ஆதார் கார்டில் பிறந்த தேதி, பெயர் மற்றும் முகவரி என பல பிழைகள் உள்ளது.

இவற்றை எல்லாம் விட ஒரு சிலர் ஆதார் அட்டையினை பல வருடங்களாக புதுப்பிக்காமலே இருப்பார்கள். அந்த வகையில் இதுபோன்ற பிரச்சனை இல்லாமல் இருக்க ஆதார் அட்டை வாங்கிய நாள் முதல் அடுத்த 10 ஆண்டுகளில் புதிப்பித்து இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

மேலும் இது போன்ற புதிப்பித்தலை இலவசமாக எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் செய்து கொள்ளலாம் என்றும் UIDAI தெரிவித்துள்ளது. இத்தகைய இலவச புதிப்பித்தலுக்கான கடைசி தேதியாக செப்டம்பர் 14-யும் அறிவித்துள்ளது.

இதற்கான கடைசி நாட்கள் நாளையுடன் முடிவடையும் நிலையில் இருக்கும் பட்சத்தில் ஆதார் கார்டு புதிப்பித்தலுக்கான தேதி அடுத்த மூன்று மாதம் அதாவது டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வரை என்று UIDAI நீட்டித்துள்ளது.

ஆகவே இத்தகைய தேதிக்குள் ஆதார் கார்டினை புதிப்பிக்காதவர்கள் புதிப்பித்துக் கொள்ளலாம்.

தங்கம் விலை எதிர்பார்க்காத அளவிற்கு குறைஞ்சிருக்கு இதாங்க வாங்குறதுக்கு சரியான நேரம்..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement