மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு போகப்போறீங்களா..! அப்போ இந்த குட் நியூஸ தெரிஞ்சுக்கிட்டு போங்க..!

Advertisement

மதுரை to கொடைக்கானல்

கோடைக்காலம் வந்தாலே அனைவருக்கும் கொண்டாட்டம் தான். ஏனென்றால் பள்ளி முதல் கல்லூரி வரை அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதால் சுற்றுலா செல்ல வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஒரு திட்டத்தினை போட்டு வெளியூர் செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்கள். இப்படி சுற்றுலா செல்ல வேண்டும் என்றவுடன் அனைவருக்கும் முதலில் தோன்றுவது என்னவோ அது ஊட்டி மற்றும் கொடைக்கானல் தான். ஆனால் இத்தகைய இடங்களுக்கு மற்ற நேரத்தில் செல்வது போல கோடைக்காலத்தில் செல்ல முடியாது. ஏனென்றால் கோடைக்காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பேருந்து முதல் ரயில் வரை என அனைத்திற்கும் டிக்கெட் இல்லாமல் போய்விடுகிறது. இந்த வருடமும் இப்படி இல்லாமல் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஆரப்பாளையம் போக்குவரத்துத்துறை கழகமானது மதுரை To கொடைக்கானல் செல்வது குறித்து மகிழ்ச்சி அளிக்கும் வகையில் ஒரு முக்கிய அறிவிப்பினை கூறியுள்ளது. ஆகையால் அத்தகைய அறிவிப்பினை பற்றிய முழு தகவலையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

Madurai to Kodaikanal Special Bus:

பொதுவாக ஏப்ரல் மாதம் இறுதி முதல் ஜூன் மாதம் 10 தேதி வரை ஊட்டி மற்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை ஆனது அதிகமாக காணப்படும். அந்த வகையில் இந்த வருடத்திற்கான கோடை விடுமுறை வந்துவிட்டதால் சுற்றுலா பயணிகளின் வருகை ஆரம்பமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

ஒரே நேரத்தில் அனைவரும் சுற்றுலா மேற்கொள்ளும் போது பேருந்து மற்றும் ரயில் பயணத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும் மற்றும் டிக்கெட் கிடைக்காமல் போவதும் வருடா வருடம் ஒரு பிரச்சனையாக உள்ளது.

இத்தகைய பிரச்சனையினை எல்லாம் அடிப்படையாக வைத்து மதுரை மக்களுக்கு ஒரு நற்செய்தியினை அளிக்கும் வகையில் ஆரப்பாளையம் போக்குவரத்துறை கழகம் ஆனது ஒரு செய்தியினை அறிவித்துள்ளது. அது என்னவென்றால்..

 மதுரையில் இருந்து கொடைக்கானலுக்கு செல்வதற்கு சிறப்பு AC பேருந்து இயக்கப்பட உள்ளதாகவும், இத்தகைய பேருந்து ஆனது மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப் முதல் கொடைக்கானல் பஸ் ஸ்டாப் வரை இயக்கப்படும் என்றும் இதற்கான கட்டணமாக 150 ரூபாய் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சிறப்பு ஏசி பேருந்து  புறப்படும் நேரம்  சென்றடையும் நேரம் 
மதுரை ஆரப்பாளையம் To கொடைக்கானல்  காலை: 04:45 காலை: 08:30
கொடைக்கானல் To மதுரை ஆரப்பாளையம்  காலை: 09:30 மதியம்: 01:30

 

இதையும் படியுங்கள்⇒ பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் பெறுவதற்கு.1 கோடி நபர்கள் தேர்வு.. யார் தெரியுமா.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement