இனி ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டாம்..! இந்த குட் நியூஸ் தெரியாதா உங்களுக்கு..!

Advertisement

ரயில் பயணம்

நாம் நிறைய வகையான பயணங்கள் சென்று இருப்போம். அத்தகைய பயணங்களில் ரயில் பயணமும் ஒன்று. பொதுவாக ரயில் பயணம் செல்வது என்பது சாதாரணமான ஒன்று தான். ஆனால் பண்டிகை நாட்களில் பயணம் செல்வது என்பது மிகவும் சாத்தியமற்ற ஒரு செயல். ஏனென்றால் அந்த அளவிற்கு கூட்டமாக இருக்கும். அதிலும் நாம் அவசரமாக செல்லும் நேரம் என்று பார்த்து ரயில் தாமதமாக வரும். அப்படி தாமதமாக வரும் பட்சத்தில் நம்மால் எதுவும் செய்ய முடியாது. பயணிகள் நிழலகத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதுவும் பொங்கல் பண்டிகை நாட்களுக்கு செல்லும் போதும் கூட்டமும் அதிகமாக இருக்கும் அதே சமயம் பனியும் அதிகமாக காணப்படும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளியை வைத்துள்ளது ரயில்வே நிர்வாகம். அது என்ன குட் நியூஸ் என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்வோம் வாங்க..!

ரயில் பயணிகள் கவனத்திற்கு:

ரயில் பயணம் செல்ல வேண்டும் என்று நாம் முடிவு செய்து விட்டால். அதனுடைய அடிப்படை விதிமுறைகளுக்கு உட்பட வேண்டியது என்பது மிகவும் அவசியமாகும்.

அப்படி நாம் செல்லும் பயணத்தில் நமக்கு நன்மை தரக்கூடிய வசதிகளும் இருக்கிறது. உதாரணமாக பேருந்தில் பயணம் செய்வதை கட்டண தொகை குறைவாகவும் மற்றும் இடம் வசதி நமக்கு ஏற்றவாறும் அமைந்துள்ளது.

என்ன தான் நமக்கு நிறைய வசதிகள் காணப்பட்டாலும் சில நேரத்தில் ரயில் தாமதமாக வருவது பயணிகளுக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்திக்கிறது.

இத்தகைய பிரச்சனையால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் புதியம் திட்டத்தை கொண்டுவரப் போவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால்..?

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇 PM KISAN: 13-வது தவணையை ஆன்லைன் மூலம் அறிய எளிய வழி இதோ..!

இனி ரயில்கள் தாமதமாக வரும் பட்சத்தில் பயணிகளில் அமர்ந்து ஓய்வெடுப்பதற்கு ஓய்வு அறை ஒன்று வரவிருக்கிறது. இந்த அறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மற்றும் RAC டிக்கெட்டுகள் வைத்து இருக்கும் பயணிகள் 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.

மேலும் இந்த வசதியை பெற 20 ரூபாய் முதல் 40 ரூபாயும் மற்றும் தங்கும் இடத்திற்கு தனியாக 10 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் இந்த திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இந்த பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை இல்லை.! உயர்கல்வித்துறை அரசு வெளியிட்டுள்ளது..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement