பள்ளி படிப்பு
மனிதனாக பிறந்த அனைவரையும் முதல் முதலில் வாழ்க்கையினை பற்றி அறிவு பூர்வமாக யோசித்து அடியெடுத்து வைக்க செல்கிறது என்றால் அது பள்ளி படிப்பு தான். இத்தகைய மழலையர் பள்ளி படிப்பு என்பது ஆரம்ப காலத்தில் 5 வயது நிரம்பியவுடன் ஆரம்பம் ஆனது. ஆனால் அப்படியே காலப்போக்கில் 3 வயது நிரம்பியதும் தனியார் துறையில் குழந்தைகளை சேர்க்க ஆரம்பித்தனர். இப்படி இருக்கும் பட்சத்தில் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் 6 வயது நிரம்பினால் மட்டுமே ஒன்றாம் வகுப்பு படிக்க முடியும் என்பதாகும். இது என்ன புதுசாக இருக்கிறது என்று நீங்கள் யோசிக்கலாம். ஆகையால் முழுவிவரங்களையும் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டாம்..! இந்த குட் நியூஸ் தெரியாதா உங்களுக்கு..!
6 வயது நிரம்பினால் தான் 1-ஆம் வகுப்பு சேர்க்கலாம்:
ஒரு குழந்தை அதனுடைய 6 வயது மற்றும் 7 வயதில் படிக்கும் படிப்பானது மழலையர் படிப்பு என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அந்த வயதில் எந்த குழந்தையும் அதனுடைய மழலை பருவத்தினை கடந்து செல்லவில்லை என்பது தான் உண்மை.
இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை 2020-க்கு இப்போது அதிகம் முக்கியத்துவம் வழங்கபட்டு வருகிறது. அது என்னவென்றால் 6 வயதிற்கும் குறைவாக உள்ள வயதில் குழந்தைகளை 1-ஆம் வகுப்பில் சேர்ப்பதன் மூலம் அதனுடைய அடிப்படை கல்வியினை அவர்களால் கற்க முடியவில்லை.
ஆகவே ஒரு குழந்தை 6 வயது நிரம்பியவுடன் தான் 1-ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவை வெளியிட்டுள்ளது. ஏனென்றால் ஒரு குழந்தை 6 வயதிற்கு மேல் 1-ஆம் வகுப்பில் சேர்க்கும் போது தான் அதனுடைய மழலையர் பள்ளி படிப்பான ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பின் அடிப்படை கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் சேரும் என்பதை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த அறிவிப்பானது அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் மாற்றி அமைக்குமாறு அறிவுறுத்தபட்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கூடிய விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு!
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |