இளைஞர்கள் அக்னி பாதை திட்டம் மூலம் முப்படைகளில் 4 ஆண்டு சேவை செய்ய.. அறிய வாய்ப்பு

Advertisement

அக்னி பாதை திட்டத்தால் இளைஞர்கள் இந்திய முப்படைகளில் சேர அறிய வாய்ப்பு..! Agneepath Scheme Details in Tamil..!

இந்திய இளைஞர்கள் யாரெல்லாம் ராணுவத்தில் சேர விரும்புகிறீர்களோ அவர்களுக்கு ஒரு சுவீட் நியூஸ்.. அதாவது நமது இந்திய பாதுகாப்பு துறை ஒரு அருமையான திட்டத்தை அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் பெயர் தான் அக்னி பாதை திட்டம். இந்த திட்டம் இந்திய இளைஞர்களுக்கு முழுக்க முழுக்க அதிக நன்மைகளை வழங்கும் வகையில் தான் இருக்கிறது.

அதாவது இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணி செய்ய கூடிய அக்னி பாதை என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.  இந்த திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12-ம் வகுப்பை முடித்த மாணவர்கள் பணியில் சேரலாம். அதுவும் 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் முப்படைகளில் சேரலாம்.  சரி வாங்க இந்த பதிவில் இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ள அக்னி பாதை திட்டம் பற்றிய முழுமையான தகவல்களை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

Agneepath Scheme Details in Tamil:

இப்பொது எல்லாம் ராணுவத்தில் நிரந்தரமாக பணிபுரிய வேண்டும் என்றால் பூனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதமி, டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதமி அல்லது பீகார் கயாவில் உள்ள அதிகாரிகள் பயிற்சி அகாதமி என்று இவற்றில் ஏதாவது ஒன்றில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த அக்னி பாதை திட்டத்தில் அப்படியெல்லாம் எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை.

திட்டத்தில் பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவர்.

அதாவது இந்த திட்டத்தில் சேர விரும்புபவர்கள் நான்கு ஆண்டுகள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் முப்படைகளில் ஏதேனும் ஒன்றில் பணி புரிந்தால் போதும். நடப்பு ஆண்டில் 46,000 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படும் இவர்களுக்கு..

ஊதியம்:

முதலாம் ஆண்டு ரூ.30 ஆயிரமும்.
இரண்டாம் ஆண்டு ரூ.33 ஆயிரமும்.
மூன்றாம் ஆண்டு ரூ.36,500-ம்,
நான்காம் ஆண்டு ரூ.40 ஆயிரமும் ஊதியமாக வழங்கப்படும்.

இதில், 30 சதவீதம் பங்களிப்பு தொகையாக பிடிக்கப்படும்.

4 ஆண்டு பணி முடித்துவிட்டு வெளியே செல்லும் போது ரூ.11.71 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். அத்துடன் ரூ.48 லட்சத்துக்கு ஆயுள் காப்பீடும் வழங்கப்படுமாம்.

பணியின் போது விவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அதற்கான இழப்பீடு என்ன?

பணியின்போது வீரமரணம் அடையும் வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.

பணியின் போது காயம் அடைந்து 100% உடல் ஊனமுற்றாள் ரூ.44 லட்சமும், 75% காயம் அடைந்திருந்தால் ரூ.25 லட்சமும், 50 சதவீதம் காயம் அடைந்தாள் ரூ.15 லட்சமும் வீரர்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும்.

பணிக் காலத்தின் போது, ஆண்டுக்கு ஒரு மாதம் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். ஆகவே விருப்பம் உள்ள ஆண், பெண் என இருபாலரும் தேர்வு செய்யப்படுவர்.

ஆள் சேர்ப்பு எப்பொழுது நடைபெறும்?

இந்த ஆள்சேர்ப்புக்கான விளம்பர அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணியில் சேரும் வீரர்களுக்கு முதல் 6 மாதம் பயிற்சிகள் வழங்கப்படும். அதன் பிறகு 4 ஆண்டுகள் பணி முடித்த வீரர்களில் 25 சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படும்.

சிறப்பு சலுகை:

4 ஆண்டுகள் பணி முடித்த வீரர்களுக்கு வழங்கப்படும் சேவை நிதியின் மூலம் அவர்கள் வங்கியிலிருந்து கடன் பெற்று அதன் மூலம், சுயமாக தொழில் தொடங்கலாம். இருப்பினும் இவர்கள் 4 ஆண்டுகள் மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவார்கள் என்பதால் ஓய்வூதியகம் வழங்கப்படாது.

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement