Airtel 99 Recharge Plan Details in Tamil
பொதுவாக ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் அனைவரும் ரீசார்ஜ் செய்தால் தான் பயன்படுத்த முடியும். அந்த வகையில் அதிகமாக பயன்படுத்த கூடிய நெட்ஒர்க் ஆக ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் ஏர்டெல் நிறுவனம் சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் சமீபத்தில் அதன் ரூ.99 அன்லிமிடெட் டேட்டா திட்டத்தில் சில மாற்றத்தை அறிவித்துள்ளது. அவை என்ன மாற்றம் என்று இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Airtel 99 Recharge Plan Details:
ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 30ஜிபி வரை வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 1 நாள் மட்டும் வேலிடிட்டி வழங்கி வந்தது. அதேபோல் நீங்கள் இந்த திட்டத்தில் 30ஜிபி அதிவேக டேட்டாவை பயன்படுத்திய பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். இதில் சில மாற்றம் செய்துள்ளது. அவை என்ன என்று தெரிந்து கொள்வோம்..
Airtel 99 ரீசார்ஜ் பிளானில் கொண்டு வந்த மாற்றம்:
ஏர்டெல் ரூ 99 அன்லிமிடெட் திட்டம் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 2 நாட்கள் வேலிடிட்டி மற்றும் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. பயனர்கள் ஒவ்வொரு நாளும் 20 ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுகிறார்கள். அதன் பிறகு, வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது. அதாவது ஏர்டெல் 2 நாட்களுக்கு மொத்தம் 40ஜிபி வழங்குகிறது.
ஏர்டெல் ரூ 99 திட்டம் புதியதல்ல ஆனால் இது 30ஜிபி இணையத்தை 1 நாள் செல்லுபடியாகும். அதாவது இப்போது மொத்த டேட்டா 30ஜிபியில் இருந்து 40ஜிபியாக அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது. வேலிடிட்டியும் 1 நாள் அதிகரித்துள்ளது.
இறங்கி செய்யுறதுனா இதனா.. புதிய ரீச்சார்ஜ் பிளானில் தினமும் 2 GB டேட்டா வழங்கும் BSNL
இந்தத் திட்டம் டேட்டாவை மட்டுமே வழங்குகிறது மற்றும் பிற சேவைகள் இல்லை என்பதை பயனர்கள் மனதில் கொள்ள வேண்டும். பயனர்கள் ஏற்கனவே உள்ள திட்டம் அல்லது அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.
நீங்கள் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றை பற்றி காண்போம்.
ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |