ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு அசத்தலான அறிவிப்பா..? அப்படி என்ன அறிவிப்பு தெரியுமா..?

allotment of automatic get lower berth for senior citizens in train in tamil

ரயில் பயணிகள்

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் பெரும்பாலும் ரயில் பயணத்தை தான் விரும்புகின்றனர். ஏனென்றால் ரயில் பயணம் செல்வதற்கு வசதியாகவும் மற்றும் குறைவான நேரத்தில் சென்று அடைவதற்கும் உதவியாக உள்ளது. அதுமட்டும் இல்லாமல் மற்ற பயணங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது குறைவான கட்டணமும் இதற்கு வசூலிக்கப்படுகிறது. இதோடு மட்டும் இல்லாமல் மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு நிறைய சலுகைகளும் ரயில்வே நிறுவனத்தால் அளிக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரையிலும் இப்படி இருந்த வந்த பயணத்தில் புதிதாக பயணிகள் அனைவரும் பயன்பெறும் விதமாக ஒரு அறிவிப்பு வந்துள்ளது. ஆகவே அது என்ன அறிவிப்பு எப்போது அது நடைமுறைக்கு வரும் போன்ற அனைத்தினையும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசின் புதிய அறிவிப்பு… என்ன அறிவிப்பு தெரியுமா.. 

ரயில் பயணிகள் கவனத்திற்கு:

ரயிலில் பயணம் செய்வது எப்படி முக்கியமான ஒன்றாக உள்ளதோ. அதுபோலவே அதில் பயணம் செய்வதற்கு டிக்கெட் பெறுவதும் முக்கியமான ஒன்றாக உள்ளது. அதுவும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக நிறைய அம்சங்களை ரயில்வே நிலையம் அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பாக கோடை காலத்தை கருத்தில் ரயில் பயணிகளுக்கு எகானமி என்ற பிரிவினை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வந்தது அதற்கான கட்டணத்தையும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இப்போது மூத்த குடிமக்களுக்காக மற்றொரு அறிவிப்பையும் அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்றால்..?

அதாவது  45 வயதிற்குள் மேல் உள்ள பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் போன்ற அனைவரும் ரயிலில் பயணம் செல்ல டிக்கெட் பெரும் போது கீழ் பெர்த் சீட் வேண்டும் என்று கேட்டு பெறலாம் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 

மேலும் 2 அடுக்கு AC பிரிவில் 2 TO 3 என்ற படுக்கை அளவிலும், 3 அடுக்கு AC பிரிவில் 3 TO 4 என்ற படுக்கை அளவிலும் மற்றும் 6 TO 7 சாதாரண படுக்கை அளவிலும் தூங்குவதற்கு ஏற்ற மாதிரியாக அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் நடைமுறை படுத்தப்படும் என்றும் மக்களவை மன்றத்தில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ ரயில் பயணிகள் கவனத்திற்கு மீண்டும் ஒரு குட் நியூஸ் அறிவிப்பு..  உடனே அந்த நியூஸை தெரிஞ்சுக்கிட்டு பயன்பெறுங்கள்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil