தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…! ரேஷன் கடையில் இனி இதெல்லாம் மாறப்போகுதாம்..!

Advertisement

ரேஷன் கடை

மக்கள் அனைவரும் மாதம் தோறும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் இன்னும் சில பொருட்கள் என அனைத்தினையும் ரேஷன் கடையில் பெருகின்றனர். இதோடு மட்டும் இல்லாமல் அரசு வழங்கும் உரிமைத்தொகை என இதுபோன்றவற்றையினையும் ரேஷன் கடையில் தான் பெறுகிறார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இத்தகைய ரேஷன் கடை ஆனது பெரும்பாலும் ஊராட்சிக்கு ஒன்று என அனைத்து ஊர்களிலும் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுநாள் வரையிலும் இப்படி நடந்து கொண்டிருந்ததில் சில புதிய மாற்றங்களை தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். அதுவும் இத்தகைய அறிவிப்பானது ரேஷன் கடைகளுக்கானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் அது என்ன அறிவிப்பு மற்றும் அந்த அறிவிப்பில் என்ன சொல்லப்பட்டுள்ளது போன்ற அனைத்தினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!

இதையும் படியுங்கள்⇒ குடும்ப அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. 

தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஆன மு.க.ஸ்டாலின் அவர்கள் தற்போது ரேஷன் கடைகளுக்கு ஒரு புதிய அறிவிப்பினை அறிவித்துள்ளார். அது என்ன அறிவிப்பு என்றால்..?

இதுநாள் வரையிலும் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் மக்கள் அவர் அவரவருக்கான கை ரேகையினை வைத்து தான் பொருட்களை வாங்கி கொண்டு செல்கிறார்கள்.

ஆனால் இனிமேல் ரேஷன் கடையில் மக்கள் அனைவரும் கருவிழியினை லேசர் கருவியில் பதிவு செய்து அதன் மூலம் இனி பொருட்கள் வாங்க வேண்டும் என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. 

மேலும் இத்தகைய அறிவிப்பானது விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் இதன் மூலம் மக்கள் அனைவருக்கும் ரேஷன் கடை பொருட்கள் அனைத்தும் சரியான முறையில் சென்றடையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பு என்னவென்றால்..? அதாவது ரேஷன் கடைகளுக்கு கொண்டுவரப்படும் பொருட்கள் அனைத்தும் தனியார் லாரியில் தான் கொண்டுவரப்படுகிறது. இதற்காக தனி செலவும் ஆகிறது.

ஆகையால் இனிமேல் தொடக்க வேளாண்மை சங்கம் வாயிலாக புதிய லாரிகள் GPS கருவிகள் பொருத்தப்பட்டு ரேஷன் கடை பொருட்களை கொண்டு வந்து சேர்ப்பதற்காக இயக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும் ரேஷன் கடை பணித்தவிர மற்ற நேரங்களில் இத்தகைய லாரிகளை வாடகைக்கு விட்டு அதன் மூலமாகவும் தனியாக வருவாய் ஈட்ட வேண்டும் என்றும் இந்த அறிவிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அறிவிப்பானது நடைமுறைக்கு வரும் தேதி இன்னும் வெளிவராதது குறிப்பிடத்தக்கது.

இதையும் கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள் 👇
தமிழக அரசு அறிவித்த ஒரு நற்செய்தி.. இனி விவசாயிகளுக்கு பிரச்சனை இருக்காதாம்..

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil

 

Advertisement