ஏடிஎம் விதிகள்
பொதுவாக வருடங்கள் அதிகரிக்க அதிகரிக்க நம்முடைய தேவையும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. அதோடு மட்டும் இல்லாமல் நாம் காலத்திற்கு ஏற்றவாறு எது மிகவும் ட்ரெண்டிங் ஆகா இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே போகிறோம். அந்த வகையில் பார்த்தோம் என்றால் இந்த நவீன காலத்தில் உள்ள மனிதகர்கள் அனைவரிடமும் பான் கார்டு, பேங்க் Account, ATM கார்டு, Credit கார்டு மற்றும் Debit கார்டு என அனைத்து விதமான கார்டுகளையும் பெரும்பாலான நபர்கள் வைத்து இருக்கிறார்கள். இத்தகைய கார்டுகளில் அதிகமாக எல்லாரிடமும் உள்ள ஒரு கார்டு என்றால் அது ATM கார்டு தான். இத்தகைய ATM கார்டுக்கு என்று சில விதிமுறைகள் இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் மேலும் சில விதிகளை மே மாதம் 1-ஆம் தேதி முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது அறிமுகம் செய்து உள்ளது. ஆகையால் அத்தகைய புதிய விதி மாற்றங்கள் என்னென்ன என்றும் அந்த விதிகளை யாரெல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற முழுத்தகவலினையும் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ATM Crad New Rules For Punjab National Bank:
பொதுவாக வங்கியில் கணக்கு வைத்திருப்பது என்பது நம்மால் முடிந்த பண வர்த்தனையை செயல்படுத்தவும் மற்றும் வங்கிகளில் கடன் வாங்குதல், வங்கியில் உள்ள திட்டங்களின் கீழ் பணத்தினை சேமிப்பது என எண்ணற்ற செயல்பாடுகளின் கீழ் அடங்குகிறது.
இவ்வாறு பார்க்கையில் வங்கிகளில் நிறைய வகையான வங்கிகள் உள்ளது. அத்தகைய வங்கிகளில் ஒன்று தான் பஞ்சாப் நேஷனல் வங்கி. இந்த வங்கி ஆனது ஏடிஎம் பயனாளர்களுக்கு என்று சில புதிய விதிகளை மே 1-ஆம் தேதி முதல் அறிமுகம் செய்து உள்ளது.
ஏடிஎம் கார்டு என்பது நம்முடைய கணக்கில் உள்ள பணத்தினை நேரடியாக வங்கிக்கு சென்று பணம் எடுக்காமல் ஒரு இயந்திரத்தின் செயல்பாட்டின் மூலம் பணம் எடுக்க உதவும் ஒரு அட்டை ஆகும்.
வங்கிகளில் எப்படி நிறைய வகைகள் உள்ளதோ, அதனை போலவே ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு மாதிரியான ஏடிஎம் கார்டுகள் இருக்கும்.
அந்த வகையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஏடிஎம் கார்டு வைத்து இருக்கும் பயனாளர்கள் அனைவரும் அவர் அவருடைய கணக்கில் பணம் இருக்கிறதா என்று தெரிந்துக்கொண்டு பணம் எடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை சோதனை செய்யாமல் பணம் எடுக்க முயன்றால் கணக்கில் குறைந்த அளவு Balance தொகை இருந்தால் பணம் எடுக்க முடியாது என்றும் அறிவித்துள்ளது.இதையும் படியுங்கள்👇👇
சிலிண்டரின் விலை அதிரடியாக 171 ரூபாய் குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்..
மேலும் இதுபோன்ற செயல்முறைகளுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது 10 ரூபாயும் அதற்கான GST- யையும் சேர்த்து அபராதமாக விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
அதுமட்டும் இல்லாமல் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆனது Credit கார்டு மற்றும் Debit கார்டில் FreePaid கார்டுகளின் Annual Fees, Joing Fees மற்றும் இதர கட்டணங்களையும் உயர்த்து உள்ளதாக ஆலோசனை செய்து வருகிறது.
அதுபோலவே நீங்கள் ATM கார்டில் பணம் எடுக்கும் போது உங்களுடைய செயல்பாடு தோல்வி அடைந்து பணம் மட்டும் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டால் ஒரு வாரம் வரை பார்த்துவிட்டு அப்படி பணம் வரவில்லை என்றால் வங்கியிடம் புகார் அளிக்கலாம். இவ்வாறு நீங்கள் செய்வதன் மூலம் 1 மாதம் வரை பணம் திரும்ப வரவில்லை என்றால் 100 ரூபாய் அபராத தொகை உங்களுடைய கணக்கிற்கு வங்கியானது செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
இதையும் படியுங்கள்👇
பெண் ஊழியர்களுக்கு பணி நேரம் குறைப்பு.. துணை ஆளுநர் அறிவிப்பு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |