திடீரென்று ATM மையங்களில் பரிவர்த்தனை கட்டணம் கூடுதல் உயர்வு

Increase in ATM Additional Transaction Charges

ATM மையங்களில் பரிவர்த்தனை கட்டணம் உயர்வு

அனைவருக்கும் வணக்கம் இன்று முக்கியமான தகவல்களோடு உங்களை சந்திக்கிறேன் என்றால் ஒரு தகவலை சொல்ல போகிறேன் என்று அர்த்தம் ஆகும். நாம் என்னதான் டிவியில் news பார்த்தாலும் அதில் அனைத்து செய்திகளையும் நாம் பார்த்திருப்போமா என்றால் நிச்சயம் கிடையாது அதற்காகத்தான் உங்களுக்கு முக்கிய தகவலை தெரிவிக்கும் வகையில் இந்த பதிவு.

இப்போது அனைவரிடத்திலும் வங்கி கணக்கு உள்ளது அதே போல் அனைவரிடத்திலும் ATM card உள்ளது. இந்த கார்டில் எத்தனை முறை பரிவர்த்தனை செய்தால் கட்டணம் அதே போல் எந்த Atm மில் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் பிடிக்கப்படும் என்பது அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை அந்த வகையில் இப்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது அதனை பற்றி இப்போது தெளிவாக தெரிந்துகொள்வோம் வாங்க.

கூடுதல் கட்டணம் உயர்வு:

கூடுதல் கட்டணம் உயர்வு

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் Atm கார்டில் அதே ATM மையத்தில் மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்யும் போது கட்டணம் வசூலிக்கப்படும். இந்த விஷயம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா.

மாதத்திற்கு 5 முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அதற்கு கட்டணமாக 20 ரூபாய் வசூலிக்கப்படும். புதிய கட்டணமாக கூடுதல் கட்டணமாக ரூபாய் 21  வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் இன்று முதல் (ஆகஸ்ட் 18.8.2022) அமுலுக்கு வந்தது.

அதேபோல் நாம் வைத்திருக்கும் Atm கார்டை மற்ற வங்கியின் Atm மையத்தில் மாதத்திற்கு 3 முறை பரிவர்த்தனை செய்தால் நமக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாதது.  அவ்வாறு இருக்கும்பட்சத்தில் மூன்று முறைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் தெரிந்துகொள்ளவும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி அறிவிப்பு. மேலும் இதனை பற்றி தெரிந்துகொள்ள ⇒ இந்திய அணி விவரம்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil