Boi Atm Card News in Tamil
இன்றைய காலத்தில் அனைவரிடமும் வங்கி கணக்கு உள்ளது. வங்கி கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கட்டாயம் டெபிட் கார்டு வைத்திருக்கிறார்கள். இவை பணத்தை எடுப்பதற்கு போடுவதற்கு வசதியாக உள்ளது. பணத்தை எடுப்பதற்கும், போடுவதற்காக வங்கிக்கு செல்லாமல் வேலைகளை ஈசியாக முடிப்பதற்கு உதவுகிறது. ஒரு வங்கியின் atm கார்டானது அக்டோபர் 31-ம் தேதிக்கு பிறகு இயங்காதாம். அவை எந்த வங்கி, எதனால் இயங்காது போன்ற தகவலை இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
Boi atim கார்டு 31-கு பிறகு இயங்காதாம்:
பேங்க் ஆஃப் இந்தியா (BOI) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பேங்க் ஆஃப் இந்தியா டெபிட் கார்டு அக்டோபர் 31க்குப் பிறகு செல்லாது. அட்டை முடக்கப்படும். எனவே, இந்த பணியை நவம்பர் 1 ஆம் தேதிக்குள் முடிக்கத் தவறினால், உங்கள் கார்டில் இருந்து எந்தப் பரிவர்த்தனையும் செய்யவோ அல்லது ஏடிஎம்மில் பணம் எடுக்கவோ முடியாது.
ஒருவேளை நீங்கள் பாங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளராக இருந்தால், நவம்பர் 1 ஆம் தேதிக்கு முன் உங்கள் வங்கிக் கிளைக்குச் சென்று உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்வது கட்டாயமாகும். இல்லையெனில், கடைசி தேதிக்குப் பிறகு டெபிட் கார்டைப் பயன்படுத்த முடியாமல் போகலாம்.
பாங்க் ஆஃப் இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. அதில், “அன்புள்ள வாடிக்கையாளர்களே..! ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, டெபிட் கார்டு சேவைகளைப் பெறுவதற்கு செல்லுபடியாகும் மொபைல் எண் கட்டாயம். அக்டோபர் 31 ஆம் தேதிக்கு முன் உங்கள் வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டும். உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க/பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்டை முடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை ஆன்லைனிலோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ மாற்ற முடியாவிட்டால், நேரடியாக கிளைக்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம். இதற்கு மொபைல் எண் மாற்றுவதற்கான படிவத்தை நிரப்பி, அங்கு கேட்கப்படும் தகவல்களை நிரப்ப வேண்டும். இதனுடன் பாஸ்புக் மற்றும் ஆதார் அட்டையின் நகலையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வேலை முடியும் வரை டெபிட் கார்டை நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாது.
ஏடிஎம் கார்டை பயன்படுத்த மொபைல் எண் முக்கியம் என்பதால். இது எப்போதும் புதுப்பிக்கப்பட வேண்டும். மொபைல் எண்ணை அப்டேட் செய்து வைத்திருப்பது மிகவும் அவசியம்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |