ஆழ்துளை கிணறு அமைக்க 100% மானியம்..!

ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான 100% மானியம் | Borewell Subsidy in Tamilnadu 2023 in Tamil

விவசாய நண்பர்கள் அனைவருக்கும் ஹாப்பி நியூஸ்.. அப்படி என்ன நியூஸ் என்று யோசிக்கிறீங்களா? வேறு ஒன்றும் இல்லை ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க அரசு 100% மானியத்தை வழங்குகிறது. அது குறித்த செய்தியை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். சரி வாங்க இந்த மானியத்தை யாரெல்லாம் பெறலாம், தேவைப்படும் ஆவணங்கள் என்ன?, எப்படி இந்த மானிய தொகையை பெறலாம் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் படித்து பயன்பெறுவோம் வாங்க.

யாரெல்லாம் மானியம் பெற தகுதியுடையவர்கள்:bore well

ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க 100% மானியம் வழங்கப்படுகிறது. ஆக இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமுதாயத்தை சோ்ந்த விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் பாசனநீர் வசதி இல்லாத இடங்களில் 200 சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில், நிலத்தடி நீர்பாதுகாப்பான குறுவட்டங்களில் வோளாண்மை என்ஜினீயரிங் துறை மூலம் செயல்படுத்திட ஆணை பிறப்பித்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும், உள்ள நிலத்தடி நீர் பாதுகாப்பாக உள்ள குறுவட்டங்களில் கூடுதலாக 200 ஆதிதிராவிட, பழங்குடியின பிரிவை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேவைப்படும் சான்றிதழ்:

பயனாளிகள் உரிய வருவாய் துறையினால் வழங்கப்பட்டஜாதி சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்படும்:

இடத்திற்கு ஏற்றது போல் ஆழ்துளை கிணறு அல்லது குழாய் கிணறு அமைப்பது.

நீரினை இறைப்பதற்கு மின்சார சக்தி மூலம் / சூரியசக்தி மூலம் இயங்கக்கூடிய பம்புசெட்டுகள் நிறுவப்படும்.

பாசனை நீரை வீணாக்காமல் அந்த நீரை சாகுபடி செய்யப்படும் வயலுக்கு அருகில் கொண்டு செல்வதற்கு பாசனநீர் குழாய்கள் நிறுவுதல் மற்றும் நுண்ணீர் பாசன அமைப்புகளை நிறுவுதல் போன்ற பணிகள் செயப்படுத்தப்படும்.

பயனர்களுக்குக்கான முக்கிய அறிவிப்பு:

அரசால் நிர்ணகிக்கப்ட்ட ஆழத்தை விட அதிகமாக ஆழம் அமைக்க வேண்டும் என்றாலும் சரி, கூடுதல் குதிரைத்திறன் கொண்ட பம்புசெட்டுகளை அமைக்க வேண்டும் என்றாலும் சரி அதற்கான கூடுதல் செலவுகளை சம்பந்தப்பட்ட விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு நிர்ணகிப்பட்ட நிபந்தனை படி நீங்கள் கிணறு அமைத்துக்கொண்டால் அதற்கு நீங்கள் எந்த செலவும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நிர்மலா சீதாராமன் மென்மேலும் மகிழ்ச்சியை அளித்து வருகிறார்.! பெண்களுக்கான சிறந்த திட்டம்

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil