பம்பர் ஆபருங்க 365 நாட்களும் 2GB டேட்டாவை ஒரு பிளானில் அறிமுகம் செய்த BSNL..!

Advertisement

BSNL 2GB Per Day Plan 365 Days in Tamil

பொதுவாக ஆபர் என்றால் அது தீபாவளி, பொங்கல் மற்றும் ஆடி தள்ளுபடி என இதுபோன்ற பண்டிகை காலங்களில் இருப்பது ஒரு வழக்கமாக இருந்தது. ஆனால் இவை எல்லாம் ஆடை மற்றும் அணிகலன்கள் என இவற்றை மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்றாக உள்ளது. இவை இல்லாமல் அன்றாட தேவைக்கு என்று உள்ள பொருட்களும் நேரம் மற்றும் காலத்திற்கு ஏற்றவாறு ஆபரில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் நாம் அனைவரும் பயன்படுத்தும் மொபைலிற்கு கண்டிப்பாக ரீச்சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். இத்தகைய ரீச்சார்ஜ் பிளானில் ஒவ்வொரு தொலைதொடர்பு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு பல பிளான்களை அறிமுகம் செய்து வருகிறது. அப்படி பார்க்கையில் தற்போது BSNL நிறுவனம் ஆனது 365 நாட்களுக்கான ஒரு புதிய ரீச்சார்ஜ் பிளானை அறிமுகம் செய்து உள்ளது. ஆகையால் அதனை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

BSNL1515 Plan Details in Tamil:

BSNL நிறுவனம் ஆனது 365 நாட்களுக்கான ரீச்சார்ஜ் பிளானை ரூ. 1515 அறிமுகம் செய்து உள்ளது. இந்த பிளானில் உங்களுக்கான தினசரி டேட்டாவாக 2 GB பெறலாம். மேலும் இந்த பிளான் உங்களுக்கு வெறும் டேட்டா வசதியை மட்டும் அளிக்கும் திட்டமாக இருக்கிறது.

 bsnl 1515 plan details in tamil

ஆகையால் இந்த 1515 ரூபாய் திட்டத்தின் மூலம் நீங்கள் 365 நாட்களும் தடையில்லா 2 GB டேட்டா வசதியை பெறலாம். இதில் உங்களுக்கான மொத்த டேட்டாவாக 730 GB பெறலாம். மேலும் இத்தகைய திட்டத்தில் நீங்கள் SMS, வாய்ஸ் கால் மற்றும் இத்தகைய வசதியை பெற முடியாது.

மேலும் அன்றாட டேட்டா வசதி முடிந்த பிறகு 60 mbps வேகத்தில் கூடுதல் டேட்டாவையும் பெறலாம்.

அந்த வகையில் பார்த்தால் இத்தகைய திட்டமானது தடையில்லா டேட்டா வசதியை விரும்புபவர்களுக்கும், அன்றாடம் 2 GB டேட்டாவை பெறலாம். அதேபோல் இதற்கான மாத ரீச்சார்ஜ் பிளான் என்று பார்த்தால் நீங்கள் 126 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும்.

மேலும் Eros Now Entertainment மற்றும் Lokdhun Content Subscription என இந்த வசதிகளும் 30 நாட்களுக்கு உங்களுக்கு வழங்கப்படுகிறது. அதேபோல் PRBT என்ற 30 நாட்களுக்கான திட்டமும் இதில் உங்களுக்கு அளிக்கப்படுகிறது.

எப்புறா நம்ம Google Pay மூலமா கடன் வாங்கலாமா 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement