பிஎஸ்என்எல் புதிய ரீசார்ஜ் பிளான்
பொதுவாக நாம் தனியாக எந்த ஒரு செயல் அல்லது பணியினை செய்யும் போது அவ்வளவு ஆர்வம் என்பது இருக்காது. அதுவே நாம் செய்யும் செயலுக்கு எதிராக ஒரு நபர் வந்தால் போதும் போட்டி என்பது தானாகவே வர ஆரம்பித்து விடும். அப்படி பார்த்தால் நாம் அனைவரும் தெரியும் வகையில் எண்ணற்ற போட்டிகள் நடந்து கொண்டு உள்ளது. அதாவது ஜியோ, ஏர்டெல், BSNL மற்றும் வோடபோன் என இதுபோன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் புது புது ரீச்சார்ஜ் பிளான்களை அறிமுகம் செய்து போட்டி போட்டி கொண்டு யூசர்களை அதிகரித்து கொண்டு உள்ளன. அத்தகைய வரிசையில் BSNL நிறுவனம் ஆனது 411 ரூபாய் மற்றும் 788 ரூபாயில் இரண்டு புதிய பிளானை அறிமுகம் செய்து உள்ளது. ஆகையால் அதனை பற்றிய முழு விவரங்களை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
BSNL 411 Plan Details in Tamil:
BSNL நிறுவனம் அறிமுகம் செய்த 411 ரூபாய் ரீச்சார்ஜ் திட்டமானது 90 நாட்களுக்கான திட்டமாகும். அதாவது ஒரு நபர் 411 ரூபாய்க்கு ரீச்சார்ஜ் செய்வதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டாவையும், 90 நாட்களுக்கான வேல்டிட்டினையும் பெறலாம். மேலும் இதில் 90 நாட்களுக்கான மொத்த டேட்டாவாக 180 GB வழங்கப்படுகிறது.
மேலும் இத்தகைய அதிவேக டேட்டா முடிந்த பிறகு 40 Kbps வேகத்தில் டேட்டாவை அளிக்கிறது.
788 BSNL Plan Details in Tamil:
788 ரூபாய் பிளான் ஆனது உங்களுக்கு 6 மாதத்திற்கு பொருந்தக்கூடிய ஒன்றாக உள்ளது. அதாவது இந்த 788 ரூபாய் திட்டத்தில் 180 நாட்களுக்கான வேல்டிட்டியும், நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டாவையும் அளிக்கிறது. இதில் ஒட்டு மொத்த டேட்டா என்பது 360 GB ஆக உள்ளது.
மேலும் இத்தகைய டேட்டா உங்களுக்கு முடிந்த பிறகு 40 Kbps வேகத்தில் டேட்டாவையும் உங்களுக்கு அளிக்கிறது. இத்தகைய இரண்டு பிளான்களும் நீண்ட காலங்களுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்புவோருக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கும்.
மேலும் BSNL பயனாளருக்கு மிகவும் ஏற்ற ஒன்றாக இந்த திட்டமானது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக கருதப்படுகிறது. அதேபோல் இது BSNL 4G அறிமுகம் செய்த பிறகு தற்போதைய வேகத்தை விட இன்னும் கூடுதலான Internet வேகத்தை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
ரூ. 1000 மகளிர் உரிமைத் தொகை கிடைத்தவாதங்க முதலில் இதை தெரிஞ்சுக்கோங்க
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |