48 ரூபாய் ரீசார்ஜ் திட்டம்
நாம் போனை பயன்படுத்தவேண்டுமென்றால் அதற்கு மாதம் மாதம் ரீசார்ஜ் செய்வது அவசியமானதாக இருக்கிறது. சிம் கார்டு பிளாக் ஆகிவிடும் என்பதால் சரியாக ரீசார்ஜ் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த ரீசார்ஜ் பிளானுடன் டேட்டாவும் வருகிறது. இதனால் தொகையும் அதிகமாக இருக்கிறது.
குறைந்த தொகையில் ரீசார்ஜ் பிளான் ஏதும் இருக்காதா என்று தேடிகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக தான் இந்த பதிவில் வெறும் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாத வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த பிளானை பற்றி இந்த பதிவில் முழுமையாக அறிந்து கொள்வோம்.
Bsnl 48 Plan Details in Tamil:
ஏர்டெல், ஜியோ மற்றும் BSNL என இத்தகைய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டிருக்கும் பட்சத்தில் தற்போது BSNL நிறுவனம் கம்மி விலையில் அதுவும் 48 ரூபாய்க்கு புதிய பிளானை அறிமுகம் செய்து இருக்கிறது.
இந்த திட்டமானது இரண்டு சிம் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் நீங்கள் இரண்டு சிம்களும் பிளாக் ஆகாமல் இருப்பதற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். இரண்டு சிம்களுக்கும் அதிக தொகை கொடுத்து ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.
நீங்கள் 48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு செல்லுபடியாகும். ஆனால் எந்த இலவச அழைப்புகள் இல்லை என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். sms வசதி, டேட்டா வசதி கிடையாது.
கூகுள் மேப்பின் புதிய அம்சம் பாத்தா சும்மா அசந்து போயிடுவீங்க..!
யார் பயன் அடையலாம்:
நீங்கள் இரண்டு சிம்கள் பயன்படுத்துகிறீர்கள் குறைந்த செலவில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
டேட்டா, sms போன்ற எந்த வசதியும் வேண்டாம், இன்கம்மிங் கால் மட்டும் வந்தால் போதும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் உகந்ததாக இருக்கும்.
சிம் பிளாக் ஆகாமல் இன்கம்மிங் கால் மட்டும் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |