அடேங்கப்பா BSNL-ல தினமும் 2 GB டேட்டா அப்புறம் 84 நாட்களுக்கான வேலிடிட்டியா புதுசா இருக்கே..!

Advertisement

BSNL 84 Days Plan Details in Tamil

பொதுவாக நாம் எப்போதும் நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றவாறு தான் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்து இருப்போம். அதிலும் ஒரு சிலர் பணத்திற்கு ஏற்றவாறு எப்படி செலவு செய்வது என்பதில் ஒரு பட்ஜெட்டையும் போட்டு வைத்து இருப்பார்கள். அத்தகைய பட்ஜெட்டில் போனுக்கான ரீச்சார்ஜ் தொகையும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் பார்த்தால் சில நேரத்தில் பார்த்தால் நமக்கு இத்தகைய ரீச்சார்ஜ் பிளானில் சில ஆபர்கள் கிடைக்கும் பட்சத்தில் அந்த நேரத்தில் ஓரிரு நாட்கள் அல்லது மாதங்கள் என கூடுதலாக ரீச்சார்ஜ் செய்து வைத்து இருப்போம். அவ்வாறு மாதம் தோறும் ரீச்சார்ஜ் செய்வோருக்கும், இதர நபர்களுக்கும் ஒரு புதிய ஆபரை BSNL நிறுவனம் ஆனது வழங்குகிறது. ஆகையால் அதனை பற்றிய முழு விவரங்களையும் விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

84 நாட்களுக்கான ரீச்சார்ஜ் திட்டம்:

BSNL நிறுவனம் பிரத்யோகமாக 84 நாட்களுக்கான 2 ரீச்சார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. ஆகவே அதனுடைய விலை முதல் இதர அனைத்தும் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

769 ரூபாய்க்கான ரீச்சார்ஜ் திட்டம்:

769 ரூபாய்க்கான ரீச்சார்ஜ் பிளானில் உங்களுக்கு 84 நாட்களுக்கான வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது தடையில்லா போன் கால்களை நீங்கள் பேசிக்கொள்ளலாம். மேலும் நாள் ஒன்றுக்கு 2 GB டேட்டாவும், 100 SMS-களும் நீங்கள் அனுப்பிக்கொள்ளலாம்.

இத்தகைய நன்மை இல்லாமல் நீங்கள் Eros now Entertainment, BSNL Tunes மற்றும் Hardy Mobile Games என இதுபோன்ற சலுகைகளும் உங்களுக்கு இதில் கிடைக்கிறது.

599 ரூபாய்க்கான ரீச்சார்ஜ் திட்டம்:

மேல் கூறியுள்ள திட்டத்தினை போலவே இந்த திட்டமும் 84 நாட்கள் வேலிடிட்டியை கொண்டுள்ள ஒரு திட்டமாகும். மேலும் இதில் தடையில்லா போன் காலினையும் 100 SMS-களையும் நீங்கள் பெறலாம்.

அதேபோல் நாள் ஒன்றுக்கு 3 GB டேட்டவையும் அளிக்கிறது. மேலும் உங்களுடைய அன்றாட டேட்டா வசதி முடிந்த பிறகு 12 PM முதல் 5 AM வரையிலும் நீங்கள் அன்லிமிடெட் டேட்டாவை இந்த திட்டத்தின் வாயிலாக நீங்கள் பெறலாம். மேலும் இதில் Astrotell, GameOn மற்றும் Zing Music என இத்தகைய வசதியையும் பெறலாம்.

SBI பேங்கில் அக்கவுண்ட் வச்சு இருக்கீங்களா  அப்படினா இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement