வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

99 ரூபாய்க்கு ஒரு வருஷம் வேலிடிட்டியை வழங்கும் BSNL..!

Updated On: February 28, 2023 6:40 AM
Follow Us:
bsnl 1515 plan details in tamil
---Advertisement---
Advertisement

99 ரூபாய்க்கு ஒரு வருஷம் வேலிடிட்டியை வழங்கும் BSNL..!

BSNL New Recharge Plan – தற்பொழுது அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்களுடைய கட்டணத்தை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ஏற்கனவே தாங்கள் பயன்படுத்தி வந்த அதே பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்புவோர் முன்பு செலுத்தியதை விட அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு வந்துள்ளனர். மேலும் இவ்வாறு கூடுதல் கட்டணம் செலுத்தி பெறப்படும் பிளானில் எந்த விதமான கூடுதல் சலுகைகளும் இல்லாததால் வடியாளர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். இவ்வாறு வருத்தத்தில் உள்ளவர்களுக்கு BSNL நிறுவனம் புதிய பிளானை அறிவித்துள்ளது. அது குறைத்த தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

BSNL நிறுவனத்தின் ரூ.99/- ரீஜார்ஜ் பிளான் – BSNL 99 Recharge Plan 2023:

அனைவரும் வியந்து போகும் அளவுக்கு BSNL நிறுவனம் 99 ரூபாய்க்கு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக யாரெல்லாம் BSNL சிம்மை செகண்டரி சிம்கார்டாக பயன்படுத்த விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது ஏற்ற பிளான் ஆகும். ஏனெனில் நீங்கள் வெறும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் 365 நாட்களுக்கான வேலிடியுடன் மொத்தமாக 3 ஜிபி டேட்டாவும், மாதத்திற்கு 30 இலவச SMS உடன் மேலும் 300 நிமிடங்கள் வரையிலான கால் பேசும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேறு பல கூடுதல் அம்சங்களும் உள்ளன. நீங்கள் பயன்படுத்தும் அந்த BSNL சிம்கார்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் கால் மற்றும் இலவச டேட்டா வழங்கப்படும். இதைத்தவிர வேறு பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 உரிமை தொகை தமிழக அரசு வெளியிட்டுள்ளது தெரியுமா..?

ஆக செகண்டரி சிம்மை ஒரு வருடம் வரை ஆக்டிவாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது ஜியோ வருகைக்கு பிறகு அனைத்து டெலிகாம் நிறுவணங்கும் இன்கமிங் காலை பெறுவதற்கு கூட மாதம் மாதம் குறைந்தது 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை அறிவித்தது. இதன் காரணமாகவே வாடிக்கையாளர் பலரும் தாங்கள் செகண்டரி சிம்மை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருப்பதற்காகவே மாதமாதம் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து வந்தனர். இவர்களுக்கெல்லாம் மிகவும் ஏற்ற திட்டமாக BSNL இந்த 99 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now