மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ளவர்களுக்கு மத்திய அரசின் அருமையான அறிவிப்பு..! நீங்க சுய உதவிக்குழுவில் இருக்கீங்களா..!

Advertisement

மகளிர் சுயஉதவிக் குழு திட்டம்

இன்றைய காலத்தை பொறுத்த வரை வீட்டில் டிவி இருக்கிறதோ இல்லையோ அந்த வீட்டில் நிச்சயம் குழு பெற்ற நபர் இருக்கிறார்கள். ஏனென்றால் இன்றைய காலத்தில் நம்முடைய அவசர தேவைக்காக ஒரு நபரிடம் பணம் கடனாக கேட்கும் பட்சத்தில் அவர்கள் இல்லை என்று சொல்லி விட்டால், நாம் உடனே குழுவில் தான் பணம் பெறுகிறோம். குழுவிலும் நமக்கு உடனடியாக பணம் கிடைத்து விடுகிறது. இத்தகைய குழுவிலும் இரண்டு வகைகள் உள்ளது. ஒன்று தனியார் குழு மற்றொன்று மகளிர் சுய உதவிக்குழு. இந்த இரண்டு குழுவிலும் பெரும்பாலும் பெண்கள் தான் பயன் அடைகின்றனர். அதிலும் தனியார் குழுவில் வட்டி சொல்லவே வேண்டாம் கணக்கிட முடியாத அளவிற்க்கு அதிகமாக உள்ளது. இவற்றிற்கு எல்லாம் உதவும் வகையில் மத்திய அரசு மகளிருக்கு ஒரு அறிவிப்பினை அறிவித்துள்ளது. ஆகையால் அந்த அறிவிப்பினை இந்த பதிவில் தெரிந்து கொண்டு மகளிற்கு தெரியப்படுத்தலாம் வாருங்கள்.

இதையும் படியுங்கள்⇒ அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்த அதிரடி உத்தரவு.. 

மகளிர் சுயஉதவிக் குழு:

மத்திய அரசானது பெண்கள் அனைவரும் பயன் பெறும் வகையில் நிறைய திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக பார்த்தால் மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, இலவச பேருந்து வசதி என்று நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது.

இவற்றை தொடர்ந்து இப்போது நடைபெற்ற இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கல் செய்தலின் போது மற்றொரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

மகளிர் சுயஉதவிக் குழு பெயர்கள்

அதாவது மகளிர் சுய உதவிக்குழு என்பது பெண்கள் அனைவரும் பயன்பெறக்கூடிய ஒன்றாக உள்ளது. அதிலும் இந்த மகளிர் உதவிக்குழுவில் குறைவான வட்டி விகிதம் இருப்பதால் மகளிர் இதில் அதிகமாக பங்கு பெறுகின்றனர்.

ஆகையால் இவற்றை கருத்தில் கொண்டு இந்த வருடத்திற்கான பட்ஜெட் தாக்கலின் போது மகளிர் சுய உதவிக்குழுவிற்காக 30,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த தொகையின் மூலம் மகளிர் அனைவரும் பயன்பெறலாம் என்றும் மேலும் இது விரைவில் நடைமுறைக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்⇒ ஆதார் கார்டு வச்சு இருக்கீங்களா.. அப்போ இந்த அறிவிப்பை தெரிஞ்சுக்க மறந்துடாதீங்க.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement